Monday 24 August 2020

thumbnail

தமிழில் தட்டச்சு செய்யலாம் வாங்க பாகம் 1 (Tanglish) Tamil Typing without Tamil Typewriting

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ? (Phonetic)
-©நித்தி ஆனந்த்

வணக்கம், நான் நித்தி ஆனந்த், பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன், புகைப்படக்கலைஞர் மற்றும் இணையதளங்களுக்கு கணினி குறித்த கட்டுரைகளை தமிழிலும் பிரெஞ்சு மொழியிலும் எழுதிவருகிறேன். எனவே தமிழ் தட்டச்சு என்பது எனது வாழ்வில் ஒன்றாகிப்போனது ஆனால் எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. எனினும் தங்லிஷ் முறையில் கட்டுரைகள் தட்டச்சு செய்து பிரசுரிப்பது வழக்கம். என்னிடம் பல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் வெப் டிசைனர்கள் கேட்பது தமிழ் தட்டச்சு தெரியாமல் போட்டோஷாப்பில் எப்படி டிசைனிங் செய்வது ? என்பதே.

எனவே இம்மின்புத்தகத்தின் வாயிலாக தமிழ் தட்டச்சு செய்ய தெரியாமல் டிசைனிங் தொழிலில் இருப்பவர்கள் அதாவது போட்டோ லேபில் பணிபுரிபவர்கள், திருமண அழைப்பிதழ்கள் உருவாக்கும் டிசைனர்கள், வெப்டிசைனர்கள், வீடியோ எடிட்டர்கள், புகைப்படக்கலைஞர்கள் மற்றும்  DTP தொழில் செய்யபவர்கள் என இவர்களுக்கு எளிமையாக மற்றும் இலவச மென்பொருளைக்கொண்டு தமிழ் தட்டச்சு தெரியாமலேயே தங்லிஷ் முறையில் போட்டாஷாப் மற்றும் வீடியோ எடிட்டர்களில் அழகாக டிசைனிங் செய்துகொள்வது எப்படி என விளக்கியுள்ளேன்.

நம்மில் பலரும் தமிழில் தட்டச்சு பயின்றது கிடையாது எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது நாம் « தங்லிஷ் » (Tanglish) முறையில் தட்டச்சு செய்து கட்டுரையோ, புத்தகமோ, கிராபிக் டிசைனிங்கோ செய்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இம்மின்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் உள்ளே செல்லும் முன்பாக உங்களிடம் இருக்கவேண்டிய மென்பொருள் : Azhagi Plus

பின்னர் தமிழ் எழுத்துருக்கள் : இக்கட்டுரையில் நான் உங்களுக்கு விளக்கம் தருவதற்க்காக

Tamil Unicode fonts, Senthamizh fonts, Bamini fonts 

போன்ற எழுத்துருக்களைக்கொண்டு தட்டச்சு செய்வதை விளக்கியுள்ளேன். மேலும் இந்த மூன்று எழுத்துருக்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய மேலே சுட்டியை இணைத்திருக்கிறேன். முதலில் இந்த இலவச எழுத்துருக்களை உங்களது கணினியில் நிறுவிக்கொள்ளவும். ஒருவேளை எப்படி நிறுவவேண்டும் என தெரியவில்லையென்றால் இதோ சிறு விளக்கம் :

தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்தவுடன் அனைத்து எழுத்துருக்களையும் காப்பி செய்து C:\windows\Fonts என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும். 

குறிப்பு : நான் இந்த புத்தகத்திற்காக எடுத்துக்கொண்டது சுமார் 3 எழுத்துருக்களைத்தான் ஆனால் இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கும் அழகி மென்பொருளானது கிட்டதட்ட பலவகையான எழுத்துருக்களின் லே-அவுட்டினை பொனிடிக் முறையில் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Unicode, SaiIndira, Tscii, TamilBible, Tam, Tab, Bamini, Vanavil, Stmzh, Stmzh_P,Shreelipi, Lt Tm, Amudham, Sree, Diamond,
DciTmllsmail, ElcotBilingual, ElcotMadurai, GeeTamil, SunTommy, Ka, Chenet platinum, Elango, Kruti tamil, MCLK Kannmani, Mylaiplain, Periyar, Priya, Roja, Tace, TmTtValluvar

போன்ற எழுத்துருக்களின் லே-அவுட்களை சப்போர்ட் செய்யவும் கன்வர்ட் செய்யவும் அழகி என்ற இலவச மென்பொருள் பயன்படுகிறது. எனவே இப்புத்தகம் எழுத எனக்கு மூலமாக இருந்த #அழகி குழுவிற்கு எனது நன்றிகள் பல.

தமிழில் தட்டச்சு செய்யலாம் வாங்க……….

பகுதி 1 : (Phonetic to Tamil Unicode)

 

இன்றைய சூழலில் தமிழ் தட்டச்சு செய்ய பல செயலிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அவைகளில் சிறந்த செயலியான அழகி தமிழ் செயலியை பயன்படுத்தி தமிழில் (MS Word-ல் மற்றும் போட்டோஷாப் etc) தட்டச்சு செய்வது எப்படி  என பார்க்கலாம்.

முதலில் அழகி மென்பொருளை தங்களது கணினியில் நிறுவிக்கொள்ளவும். (Download & Install).

https://www.azhagi.com/

அதன் பின்னர் அழகியை இயக்கவும். இப்போது அழகி மென்பொருள் திறக்கும்.

இதில் தங்லிஷ் முறையில் MS-Word-ல் தட்டச்சு செய்து அதனை சேமிப்பது எப்படி என பார்க்கலாம். முதலில் அழகி மென்பொருளை திறக்கவும். பின்னர் நான் கீழே காட்டிய செட்டிங்குகளை வைக்கவும். பின்னர் அழகி மென்பொருளை minimize செய்து கொள்ளவும்.

குறிப்பு
 : அழகி மென்பொருளை மூடவேண்டாம். பின்புலத்தில் இயங்கவேண்டும் என்பதை நினைவில் கொள்க !


சரி இனி மைக்ரோசாப்ட் Word- இயக்கவும். இப்போது ஒரு சிறிய செட்டிங்கை செய்து தமிழ் தட்டச்சை இயக்கவேண்டும். 


அழகி மென்பொருளில் முதலில் ஒரு செட்டிங்க்ஸை செய்தோமல்லவா
 ? அங்கே நீங்கள் கவனித்தீர்களேயானால் தமிழ் விசைப்பலகையை enable செய்ய ஒரு ஷார்ட்கட் கீ கொடுத்திருப்பார்கள். அதனை இப்போது ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்.

Alt+3 என கொடுத்திருக்கிறார்கள். இப்போது Alt+3 யை அழுத்தவும். அவ்வளவுதான். இப்போது task bar ல் பார்த்தீர்களேயானால் TA என மஞ்சள் நிறத்தில் தோன்றும். அதாவது உங்களது விசைப்பலகையானது தமிழ் typing mode க்கு enable செய்யப்பட்டது என்பதாகும்.

அவ்வளவுதான் இனி Word-ல் தட்டச்சு செய்ய துவங்கவேண்டியது தான். இப்போது பாருங்கள் நீங்கள் தட்டச்சு செய்ய துவங்கியதும் உங்களது எழுத்துரு « Nirmala UI » என தானியங்கியாக மாற்றப்பட்டிருக்கும். (in Windows 10)

சரி இப்போது இடையில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுத்துக்களை உள்ளீடு செய்யவேண்டுமென்றால், விசைப்பலகையில் Alt+3 ஐ அழுத்தவும். இப்போது உங்களது விசைப்பலகையானது ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கும்.

மீண்டும் தமிழ் தட்டச்சிற்கு வர விசைப்பலகையில் அதே Alt+3 ஐ அழுத்தினால் போதுமானது. தமிழில் தட்டச்சு முடிந்ததும் டாக்குமெண்டை சேமித்துக்கொள்ளவும். அல்லது பிரிண்ட் செய்துகொள்ளவும். இந்த தட்டச்சு முறையில் நாம் யூனிகோட் எழுத்துருக்களை கொண்டு தட்டச்சு செய்வதால் இதனை பிறகணினியிலும் பார்த்துக்கொள்ளலாம்.(Defaults fonts like Latha,Vijaya,Nirmala in windows)
 
அதேவேளையில் பிறருக்கு மின்னஞ்சலும்
(Copy & paste method) செய்துகொள்ளலாம். அல்லது இ-மெயிலை நீங்கள் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யவேண்டுமென்றால் கூகுள் பிரவுசரில் உங்களது மின்னஞ்சலை திறந்துகொண்டு விசைப்பலகையில் Alt+3 ஐ அழுத்தி நேரடியாக தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம். இதேபோல இணையத்திலும் தமிழில் தங்லிஷ் மூலமாக தமிழில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல உங்களது Whatsapp செயலியிலும் தட்டச்சு செய்துகொள்ளலாம். Whatsapp ஐ பிரவுசரில் இணைப்பை ஏற்படுத்தி பின்னர் விசைப்பலகையில்  Alt+3 ஐ அழுத்தி தமிழ் தட்டச்சு முறையை activate செய்து பின்னர் அப்படியே தமிழில் தட்டச்சு செய்துகொள்ளவேண்டியதுதான்.

Bonus Tips : விண்டோஸின்  default  தமிழ் எழுத்துக்களான Nirmala UI, Latha, Vijaya போன்ற எழுத்துருக்கள் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் இணையத்தில் இலவசமாக தமிழ் யுனிகோட் Stylish எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து உங்களது கணினியில் நிறுவிக்கொண்டு யுனிகோட் முறையில் அழகழகான எழுத்துருக்களில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

இங்கு நான் இக்கட்டுரைக்காக இளங்கோ யுனிகோட் எழுத்துருவை பயன்படுத்தியிருக்கிறேன்.

அவ்வளவுதான் இதுமாதிரி உருவாக்கிய டாக்குமெண்டுகளை பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமானால் அந்த டாக்குமெண்டை PDF ஆக மாற்றி அனுப்பலாம். இதனால் font பிரச்சனை இல்லாமல் படிக்க இயலும்.

இந்த பாகத்தில் தங்லிஷ் முறையில் « அழகி » மென்பொருளை வைத்து எப்படி தட்டச்சு செய்து கொள்ளலாம் என பார்த்தோம். இப்போது உங்களுக்கு எழும் ஒரு ஐயம் இந்த யுனிகோட் எழுத்துருக்களை கொண்டு டிசைனிங் செயலிகளான போட்டோஷாப், கோரல்-டிரா, அடோப் பிரிமியர் போன்றவைகளில் பயன்படுத்த முடியுமா ?

பதில் : பயன்படுத்த முடியும். இது பற்றி நாம் அடுத்த பதிவில் விரிவாக காணலாம். (இணையத்தில் இலவசமாக கிடைக்கும் சில யுனிகோட் எழுத்துருக்கள் என்னுடைய போட்டோஷாப் செயலியில் (Photoshop CC 2019)  phonetic முறையில் வேலை செய்கிறது). 

முதல் பாகம் முடிந்தது. நன்றி.



Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments