Wednesday 25 November 2020

thumbnail

How to type in tamil using Tamil Typewriter Keyboard layout in Google Docs? கூகுள் டாக்ஸ் இல் தமிழ் டைப்ரைட்டர் தட்டச்சு முறையில் தட்டச்சு செய்வது எப்படி?

 

கூகுள் டாக்ஸ் இல் தமிழ் தட்டச்சு முறையில் தட்டச்சு செய்வது எப்படி?

வணக்கம் நான் அழகி மென்பொருள் மூலமாக தமிழில் தட்டச்சு செய்வது பற்றிய கட்டுரை பகிர்ந்திருந்தேன் அதன் பின்னர் நண்பர்கள் சிலர் தங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் (Tamil Type Writer Machine) தட்டச்சு  செய்ய தெரியும் ஆனால் நாங்கள் யூனிகோட் எழுத்துருவை பயன்படுத்தி எங்களது படைப்புகளை மின்புத்ததகமாகவோ அல்லது அமேசான் கிண்டில் போன்ற இணையவழியில் பகிர்ந்துகொள்ளவோ அழகியில் வசதியுள்ளதா என என்னிடம் கேட்டிருந்தனர்  அவர்களுக்கான கட்டுரை இதோ :

முதலில் அழகி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

இப்போது அழகியை இயக்கவும்.

இப்போது கீழே நான் செய்திருக்கும் செட்டிங்குகளை செய்துகொள்ளவும். 

© Nithi Anand

அதாவது Language இல் Tamil ஐ தேர்வு செய்துகொள்ளவும். Font Encoding என்பதில் Unicode ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.கடைசியாக  Keyboard Layout என்பதில் Typewriter Old என்பதை தேர்ந்தெடுத்து , அழகியை Minimize செய்துகொள்ளவும். இனி விசைப்பலகையில் Toggle Key ஐ ஆக்டிவேட் செய்துகொள்ளவும். அழகியில் இந்த ஆப்ஷனுக்கு Alt+7 ஆகும். இதனை Enable செய்துகொண்டு இனி கூகுள் டாக்ஸை திறக்கவும். இபோது தட்டச்சு செய்யுங்கள் கூகுளில் இனி தமிழ் யூனிகோட் எழுத்துக்கள் கூகுள் டாக்சில் வேலை செய்யும்.

© Nithi Anand


எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாததனால் நான் விசைப்பலகையில் ASDFG எனவும் QERTY என்ற எழுத்துக்களை மட்டும் தட்டச்சு செய்துள்ளேன்.

இதே செட்டிங்ஸை பயன்படுத்தி நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

© Nithi Anand


குறிப்பு : மின்னிதழ் மற்றும் இணைய வழியில் பகிரும் கட்டுரைகளுக்கு தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள் தான் தேவைப்படும். எனவே நான் தங்களுக்கு  பரிந்துரை செய்வது கூகுள் அளித்திடும் இலவச தமிழ் எழுத்துருக்களே.

இவைகளை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யவும் .  இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தும்போது உங்களின் மின் புத்தகத்தை படைக்கும்போது எவ்வித சிக்கலும் எழாது. (Amazon kindle, E-pub format, PDF Etc..)

Browse Fonts - Google Fonts

நன்றி

நித்தி ஆனந்த்.

À propos de Nithi Anand | Flickr



Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments