Tuesday 25 August 2020

thumbnail

தமிழில் தட்டச்சு செய்யலாம் வாங்க பாகம் 3 (Tanglish) Tamil Typing without Tamil Typewriting

பகுதி 3 : Tamil phonetic to Bamini

இப்பகுதியில் நாம் « பாமிணி » எழுத்துருக்களை அழகி மென்பொருளில் எவ்வாறு பயன்படுத்துவது எனப்பார்க்கலாம்.

முதலில் அழகி மென்பொருளை இயக்கி கீழ்கண்ட செட்டிங்குகளை செய்துகொள்ளுங்கள்.


இனி Word ஐ இயக்கி அதில் « பாமிணி » என்ற எழுத்துருவை தேர்ந்தெடுத்து  தட்டச்சு செய்யுங்கள்.


ஆனால் இங்கு எனக்கு phonetic முறையில் பாமிணி எழுத்துரு வேலை செய்யவில்லை. ஒருவேளை என்னுடைய விசைப்பலகை பிரஞ்சு மொழி விசைப்பலகையாக இருப்பதனால் ஏதாவது bug ஆக இருக்கலாம். இவ்வாறாக ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட லே-அவுட் தேர்ந்தெடுத்து அதில் தங்லிஷில் வேலை செய்யவில்லையென்றால் கவலை வேண்டாம். இதற்காகவே அழகி மென்பொருள் Font Converter என்ற வசதியை அதன் பயனாளர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்துள்ளது என்பது மிக மிக நல்ல செய்தியாகும். 

சரி இப்போது « அழகி » மென்பொருளை இயக்கி நான் செய்துள்ள கிழே செய்துள்ள செட்டிங்குகளை செய்து பின்னர் Fonts Converter ஐ திறக்கவும்.

 


 

Fonts Converter இல் நான் கீழே செய்துள்ள செட்டிங்குகளை செய்யவும்.


இப்போது Alt+F2 ஐ அழுத்தவும் இப்போது உங்களது விசைப்பலகை தமிழுக்கு enable செய்யப்பட்டிருக்கும். இப்போது இடதுபுறம் நீங்கள் தங்லிஷ்-ல் தட்டச்சு செய்ய செய்ய வலதுபுறம் « பாமிணி » எழுத்துருக்கு கன்வர்ட் செய்யப்படும். தட்டச்சு முடித்தப்பின்னர் வலதுபுறமுள்ள « பாமிணி » எழுத்துருவை காப்பி செய்து பின்னர் மைக்ரோசாப்ட் வோர்டில் பேஸ்ட் செய்துகொண்டு பின்னர் « பாமிணி » எழுத்தை தேர்வு செய்தால் போதும். « பாமிணி » பார்மேட்டில் டாக்குமெண்ட் தயார்.


இதேபோல போட்டோஷாப்பிலும் காப்பி செய்த டெக்ஸ்டை பேஸ்ட் செய்து பின்னர் « பாமிணி » எழுத்துருவை தேர்வு செய்ய தமிழ் எழுத்து தயார்.


கடைசியாக வீடியோ எடிட்டரிலும் சோதித்துப்பார்க்கலாம்.


இம்முறை « பாமிணி » எழுத்துருக்களை மட்டும் வைத்துக்கொண்டு பணி புரியும் டிசைனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

கட்டுரையின் கடைசி பகுதியாக Tam,Tab வகை லேஅவுட்களைக்கொண்டு தங்லிஷ் தட்டச்சு செய்யும் முறையை பார்க்கலாம்.

என்னிடம் Softview நிறுவனம் தயாரித்த எழுத்தாணி என்னும் எழுத்துக்களை (Tam,Tab Fonts) 100ரூபாய் விலைக்கு ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தேன். அந்த எழுத்துருக்களை அழகியில் எப்படி phonetic முறையில் பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் அழகி செயலியை இயக்கவும். இப்போது கீழே நான் செய்துள்ள செட்டிங்குகளை செய்துகொள்ளவும்.

இனி இதற்க்கான ஷார்ட்கட் கீயான Alt+9 ஐ இயக்கி தமிழ் விசைப்பலகையை enable செய்துகொள்ளவும்.

இனி Word-ஐ திறந்து உங்ககளிடம் இருக்கும் Tab தமிழ் எழுத்தை தேர்ந்தெடுத்து தங்லிஷ்-ல் தட்டச்சு செய்ய முறையாக தமிழில் தோன்றுவதை பாருங்கள்.


இதேமுறையில் போட்டோஷாப் மற்றும் இன்ன பிற எடிட்டர்களிலும் தங்லிஷ் முறையில் தமிழ் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

அவ்வளவுதான் இக்கட்டுரையில் « அழகி » மென்பொருளைக்கொண்டு தமிழ் எழுத்துருக்களை Word, போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டர்களில் phonetic முறையில் பயன்படுத்துவதை பற்றி தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

பாகம் 3 நிறைவடைந்தது.

பாகம் 1

பாகம் 2

நன்றி வணக்கம் !!!
கட்டுரை & ஆக்கம்

நித்தி ஆனந்த்
Passion Photographer, France.
https://www.flickr.com/photos/nithiclicks/


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments