Monday 24 August 2020

thumbnail

தமிழில் தட்டச்சு செய்யலாம் வாங்க பாகம் 2 (Tanglish) Tamil Typing without Tamil Typewriting

 தமிழில் தட்டச்சு செய்யலாம் வாங்க……….

வணக்கம் சென்றபாகத்தில் தமிழ் Tanglish முறையில் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி என பார்த்தோம் இப்பாகத்தில் இதேமுறையில் போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டரில் எப்படி பயன்படுத்துவது எனப்பார்க்கலாம்.

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் யுனிகோட் எழுத்துருக்கள் என்னுடைய போட்டோஷாப் செயலியில் (Photoshop CC 2019)  phonetic முறையில் வேலை செய்கிறது. 

முதலில் போட்டோஷாப்பை இயக்கி கீழ்கண்ட செட்டிங்குகளை செய்துகொள்ளவும்.


File>Preference>Type செல்லவும். பின்னர் « Middle Eastern and South Asian » என்பதை செலெக்ட் செய்துகொண்டு ok செய்யவும். 



இப்பொழுது « அழகி » மென்பொருளை இயக்கி  « Alt+3 » ஐ அழுத்தி தமிழ் தட்டச்சினை enable செய்து பின்னர் போட்டோஷாப் சென்று தமிழ் யுனிகோட் எழுத்தை தேர்வுசெய்துகொண்டு இப்போது தட்டச்சு செய்யுங்கள் தமிழில் எழுத்துக்கள் வருவதை பாருங்கள்.



Update :
போட்டோஷாப் 2021 பயன்படுத்துபவர்கள்
World-Ready layout ஐ தேர்வுசெய்து கொள்ளவும்.



இங்கு நான் இளங்கோ நீலாம்பரி என்ற யுனிகோட் எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்தியிருக்கிறேன். அடுத்தாக வீடியோ எடிட்டரில் முயற்சி செய்யலாமா ?

இங்கு « பாரீஸ் ஸ்கேட்டிங் » என என்னுடைய வீடியோ எடிட்டரில் தட்டச்சு செய்கிறேன். ஆனால் எனக்கு இங்கு தமிழ் எழுத்தானது சரியாக வரவில்லை. காரணம் நான் பயன்படுத்தும் Cyberlink Power Director இல் Asian Languages க்கான ஆப்ஷன்கள் தரப்படவில்லை. ஒருவேளை அடோப் பிரிமியரில் சரியாக வேலை செய்யலாம். என்னிடம் அடோப் பிரிமியர் இல்லை.  


ஆகவே, « phonetic » முறையில் எனக்கு இங்கு வேலை செய்யவில்லை. எனினும் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் முறையாக தமிழ் தட்டச்சு மூலம் செய்தால் கண்டிப்பாக வரும் ஆனால் எனது நோக்கம் தமிழ் தட்டச்சு தெரியாமல் தங்லிஷ் இல் வரவைப்பது தான். எனவே அடுத்த பகுதியில் « அழகி » மென்பொருளின் மற்றுமொரு சிறப்பம்சத்தால் இதனை சரி செய்துவிடலாம் கவலையில்லாமல் கட்டுரையை பின்தொடருங்கள்.

சரி இப்போது செந்தமிழ் (RGB fonts) என்ற எழுத்துருக்களைக்கொண்டு தட்டச்சு செய்வது எப்படி எனப்பார்க்கலாம். பொதுவாக இன்றும் நம்மில் பல டிசைனர்களால் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துரு செந்தமிழ் எழுத்துருவாகும். (Stylish tamil fonts). செந்தமிழ் மற்றும் RGB எழுத்துருக்கள் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த எழுத்துருக்களாகும். நான் இந்த எழுத்துருக்களை சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்திவருகிறேன். இதேபோல் KA எழுத்துருக்களும் பல டிசைனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு தமிழ் எழுத்துருவாகும். அழகி- யின் சிறப்பே செந்தமிழ் மற்றும் KA இவ்விரு லே-அவுட்களையும் கையாள்கிறது என்பதுதான்.

இப்போது நான் கீழே காட்டியுள்ள செட்டிங்குகளை செய்துகொள்ளவும்.


இப்போது மைக்ரோசாப்ட் Word  திறக்கவும். அதில் செந்தமிழ் அல்லது RGB எழுத்துருவை தேர்வு செய்துகொள்ளவும். அழகியில் செந்தமிழ் எழுத்திற்கான shortcut ஆனது default ஆக Ctrl+Alt+F10 ஆகும்.

விசைப்பலகையில் Ctrl+Alt+F10 அழுத்த உங்களது டாஸ்க்பாரில் TA என மஞ்சள் நிறத்தில் தோன்றும்.



இப்போது மைக்ரோசாப்ட் Word-ல் தட்டச்சு செய்யவும் « vanakkam nhanparkaLE «  என நான் தங்லிஷில் தட்டச்சு செய்ய இப்போது தமிழில் « வணக்கம் நண்பர்களே » என அழகிய செந்தமிழ் எழுத்துருவில் தெரிவதைக்காணலாம். 

இந்த எழுத்துருக்களைக்கொண்டு தமிழில் அழகழகாக வடிவமைத்துக்கொள்ளலாம். செந்தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய Word டாக்குமெண்டுகளை அதன் தரம் மாறாமல் PDF கோப்பாக மாற்றி உங்களது நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது Word  கோப்பாக அனுப்பவேண்டியிருந்தால் அனுப்பப்படும் நபரிடமும் அதே எழுத்துரு இருக்கவேண்டும்.

அடுத்ததாக இந்த செந்தமிழ் (RGB) எழுத்துருவை போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டர்களில் எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

முதலில் போட்டோஷாப்பை இயக்கவும். உங்களது டாக்குமெண்டை உருவாக்கியப்பின் டெக்ஸ்ட் டூலை தேர்வு செய்துகொள்ளவும்.
பின்னர் செந்தமிழ் எழுத்துருவை தேர்வுசெய்துகொள்ளவும்.

பின்னர் டெக்ஸ்ட் பிராப்பர்டீஸ் தேர்வு செய்து Paragraph option சென்று நான் தேர்வு செய்துள்ள செட்டிங்கை select செய்யவும். (Latin and East Asian Layout). இல்லையென்றால் நீங்கள் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் ரிவர்ஸில் தெரியும்.


எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் தமிழில் செந்தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்யும் முன்னர் இந்த செட்டிங்க்குகளை போட்டோஷாப்பில் அவசியம் செய்துகொள்ளுங்கள். இப்போது போட்டோஷாப்பில் தட்டச்சு செய்ய துவங்குங்கள். செந்தமிழ் எழுத்துக்கள் phonetic  முறையில் வேலைசெய்வதை காணலாம்.


அடுத்தாக இந்த செந்தமிழ் எழுத்துருக்களை என்னுடைய வீடியோ எடிட்டரில் முயற்சி செய்து பார்க்கலாம். இதேபோல் « அழகி » மென்பொருளில் தமிழ் தட்டச்சினை shortcut keys மூலமாக enable  செய்துகொண்டு என்னுடைய வீடியோ எடிட்டரை திறந்துகொண்டு பின்னர் செந்தமிழ் எழுத்துருவை தேர்வு செய்து இப்போது தங்லிஷ்-ல் தட்டச்சு செய்ய எனக்கு தமிழ் எழுத்துகள் நேர்த்தியாக வருகிறது.

ஆகவே நீங்கள் ஒரு கிராபிக் டிசைனராக இருந்து போட்டோஷாப் ஆல்பம் டிசைனிங், கோரல் டிராவில் அழைப்பிதழ்கள் டிசைனிங் அல்லது  வீடியோ எடிட்டிங் மென்பொருள்களில் பணிபுரிபவராக இருந்தால் உங்களிடம் செந்தமிழ் எழுத்துருக்கள் இருந்தாலே போதும். « அழகி » மென்பொருளை பயன்படுத்தி தமிழ் தட்டச்சு தெரியாமலேயே phonetic  முறையில் தட்டச்சு செய்துகொள்ள முடியும் என்பது ஒரு நல்ல செய்தி.

இரண்டாம் பாகம் நிறைவுற்றது.







Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments