Tuesday 29 June 2021

thumbnail

முத்தான 10 தமிழ் எழுத்துருக்கள் (Tamil Unicode Fonts)

முத்தான 10 தமிழ் எழுத்துருக்கள்(Tamil Unicode Fonts) 

இன்றைய தேதியில் இணையத்தில் பல தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றது யூனிகோட் மற்றும் லே-அவுட் எழுத்துருக்கள் என இரண்டு வகையாக கிடைக்கிறது. பொதுவாக டிசைனர்களாக பணிபுரிவோர்களுக்கு பல எழுத்துருக்கள் தேவைப்படும் ஆனால் சாமானியர்களுக்கு அவ்வளவு எழுத்துருக்களையும் கணினியில் நிரப்பிவைக்க வேண்டிய தேவை இருக்காது. அப்படிப்பட்டவர்கள் நச்சுனு ஒரு 10 எழுத்துருக்கள் போதும் என யோசிப்பார்கள். ஏன் நானும் அப்படித்தான் !. 

காரணம் எனக்கான தேவையே எம்.எஸ் வேர்டில் (M.S.Word) சில டாக்குமெண்டுகள் உருவாக்குவது மற்றும் இணைய மின்புத்தகங்களுக்காக கோப்புகளை உருவாக்குவது மட்டுமே. இதில் நமக்கு தேவையானது ஒருங்குறி எழுத்துக்கள் மட்டுமே. இதில் ஒருசிலர் கூகுள் டாக் பயன்படுத்துவார்கள். ஒருசிலர் எம்.எஸ்.ஆபீஸ் (M.S.Office) தொகுப்பு பயன்படுத்துவார்கள் !. 

 சமீபத்தில் கூட ஒரு அழகி+ பயனாளர் என்னிடம் பேசும்போது எம்.எஸ்.ஆபிஸ் (MS office) தொகுப்பில் பயன்படுத்த ஒரு 10 நல்ல எழுத்துருக்களை பரிந்துரை செய்யுங்கெளேன்னு என்னிடம் வினவினார். நானும் அவருக்கு பகிர்ந்த 10 முத்தான எழுத்துருக்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள்கிறேன். 

சமீபத்தில் தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக சில தேடுதல்களை செய்து கொண்டிருந்தபோது பாடசாலை இணையத்தை பார்வையிட்டேன். அங்கு அவர்கள் சில ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக அளித்திருந்தனர். அவைகளை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து எனக்கு பிடித்த 10 எழுத்துருக்களை கணினியில் நிறுவி இன்றும் அவைகளை பயன்படுத்தி வருகிறேன். 

 அழகி+  இன் உதவியோடு இவ்வெழுத்துருக்களை எம்.எஸ் ஆபீஸ் தொகுப்பில் எவ்வித சிக்கல் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இங்க சொடுக்கவும்.

குறிப்பு : இதில் TAU Marudham (மருதம்) தமிழக அரசால் அரசு அலுவகங்களில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட எழுத்துரு என்பது குறிப்பிடத்தக்கது.

அழகி+ ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments