Friday 2 July 2021

thumbnail

கூகுள் தமிழ் எழுத்துக்களை அழகி + உடன் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?

 கூகுள் தமிழ் எழுத்துக்களை அழகி + உடன் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?
வணக்கம் நண்பர்களே ! இன்றைய கட்டுரையில் போட்டோஷாப் 2021 இல் கூகுள் வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்களை போட்டோஷாப்பில் உங்களது டிசைனிங் வேலைகளுக்கு பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.
போட்டோஷாப் தனது 2020 ஆம் ஆண்டு பதிப்பில் "World-Ready Layout" ஐ அறிமுகம் செய்தது.  இதில் உலகில் பல மொழிகளை ஆதரிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. இதில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களும் அடக்கம்.
நான் ஏற்கனவே அழகி + பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என 3 பாகமாக கட்டுரை எழுதியிருந்தேன். அதனை (இங்கே,இங்கே,இங்கே) படிக்காதவர்கள் சென்று படிக்கவும். 

கூகுள் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
இப்போது அழகி + மென்பொருளை திறந்து உங்களது தட்டச்சு முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அழகி+ ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நான் இங்கு போனிடிக் முறையை தேர்ந்தெடுத்துள்ளேன்.
Toggle விசையை அழுத்தி அழகியை active வில் வைக்கவும். இப்போது உங்களது டாஸ்க் பாரில் அழகியின் icon ஆனது மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

இனி போட்டோஷாப்பை இயக்கவும்.

Edit மெனுவில் உள்ள Preference>Type செல்லவும். 

பின்னர் அதில் நான் தேர்வு செய்துள்ள World-Ready Layout ஐ தேர்வு செய்து ok செய்யவும்.


இப்போது Type டூலை தேர்வு செய்து கூகுள் எழுத்துருவை தேர்வு செய்து தட்டச்சு செய்ய துவங்குங்கள்.

இப்போது பாருங்கள் தமிழில் தட்டச்சு ஆகிறது ஆனால் எழுத்துக்கள் முறையாக தட்டச்சு ஆகவில்லை. சரி கவலை வேண்டாம்.


இப்போது Text Properties டூலை தேர்வு செய்து அதில் Paragraph ஐ தேர்வு செய்யவும்.

பின்னர் நான் படத்தில் காட்டியிருக்கும் குறியீடை அழுத்தி இப்போது World-Ready Layout ஐ தேர்வு செய்யவும் இப்போது உங்களது கூகுள் எழுத்துரு நேர்த்தியாக தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். அவ்வளவே....

அழகி + மூலமாக கூகுள் எழுத்துருக்களை போட்டோஷாப் (Photoshop) கோரல் டிரா போன்ற டிசைனிங் மென்பொருட்களிலும் மற்றும் எம்.எஸ் ஆபீஸ் (M.S.Office) தொகுப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி
அன்புடன்,
நித்தி ஆனந்த்
புகைப்படக்கலைஞர்
பிரான்ஸ்



Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments