Monday 7 December 2020

thumbnail

அழகி Portable செயலியில் உங்களுக்கான கீபோர்ட் lay-out டை இணைப்பது எப்படி ?

 

அழகி Portable செயலியில் உங்களுக்கான கீபோர்ட் lay-out டை இணைப்பது எப்படி ?

வணக்கம் அழகி பயனாளர்களே !! இன்றைய கட்டுரையில் நாம் அழகி Portable Editionல் நமக்கு தேவைப்படும் கீபோர்ட் லே-அவுட் கோப்புகளை தனியாக இணைப்பது எப்படி என பார்க்கலாம்.

அழகி மென்பொருள் என்பது தமிழ் தட்டச்சு செய்யும் பாமரன் முதல் படைப்பாளி வரை அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. காரணம் இதிலிருக்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் வேறு தட்டச்சு மென்பொருளில் இல்லை என்பதேயாகும்.

அழகி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் செயலியாகவும் மற்றும் Portable எனப்படும் இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தும் வகையிலும் இரண்டு versions உள்ளது.

Portable Edition ன் சிறப்பு என்னவென்றால் கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே இயக்கிக்கொள்ளலாம். இது பொதுவாக travelல் இருப்பவர்களுக்கும், பணியிடத்தில் கொடுக்கும் கணினியை உபயோகிக்கும் பயனாளர்களுக்கும் பயன்படும். அதாவது பணியிடத்தில் கொடுக்கப்படும் கணினியில் பிற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த நிறுவனம் அனுமதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில்,  அழகியில் தட்டச்சு செய்ய அழகியின் Portable Edition மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதை Pen-Drive இலிருந்தே இயக்கலாம் என்பதை முந்தைய கட்டுரையிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன்.

சரி கட்டுரைக்கு வருவோம் !! பொதுவாக தமிழ் தட்டச்சு செய்யும் வகையை (Input method ) கீழ்கண்டவாறு சுலபமாக பிரிக்கலாம்.

1.                 Phonetic Transliteration. தமிழ் டைப்ரைட்டிங் தெரியாதவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது.

2.              Tamilnet99 தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு முறை.

3.              Old typewritter அதாவது தட்டச்சு இயந்திரத்தில் முறையாக தட்டச்சு பயின்றவர்கள் பயன்படுத்தும் முறை.

மேற்கூறிய எதாவது ஒரு வகையில் தான் நாம் நமது தட்டச்சை கணினியில் விசைப்பலகையின் மூலமாக உள்ளீடு செய்கிறோம். இதில் Phonetic Transliteration, ஒவ்வொரு செயலியிலும்  வேறுபட்ட முறையில் பயன்படுத்துவார்கள். சான்றாக, 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த அழகியின் முறையில் Phonetic Transliteration ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்பவர்களும் அதன்பின்பு சில ஆண்டுகள் கழித்து வந்த கூகுள் Phonetic Transliteration ஐ பின்பற்றி தட்டச்சு செய்பவர்களும் ஒருவகை பயனாளர்கள். ஒருசிலரோ, எ-கலப்பை, என்.எச்.எம், தகடூர் போன்ற எழுதிகளின் Phonetic Transliteration முறையைப் பின்பற்றி அம்முறையில் தட்டச்சு செய்பவர்கள். அடிப்படையில் இரண்டும் ஒரே மாதிரியான தட்டச்சுமுறை தான் என்றாலும் சிலபல எழுத்துக்களைக் கையாள்வதில் மாற்றம் உண்டு. சான்றாக, அழகி மற்றும் கூகுள் முறையில் « ந் » என்ற எழுத்திற்கு « n அல்லது nh » என தட்டச்சு செய்ய வேண்டும், எ-கலப்பை  எழுதியிலோ « w  » என தட்டச்சு செய்ய வேண்டும். இதுபோன்று, கையாள்வதில் மாறுதல்கள் உண்டு. நான் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக « எ கலப்பை » எழுதியின் தட்டச்சு முறையில் தான் தட்டச்சு செய்வது வழக்கம்.

எனவே இப்போது அழகி யில் நான் இந்த « எ-கலப்பை »   தட்டச்சுமுறையை இணைத்தால் தான் என்னால் « எ-கலப்பை »  முறையில்  தமிழில் தட்டச்சு செய்யஇயலும். இதுபோலத்தான் ஒவ்வொறு எழுத்துருக்களுக்கும் உங்களது தட்டச்சு முறையை (input) அழகியில் இணைக்கவேண்டும்.

உதாரணமாக, நான் தமிழில் தட்டச்சு செய்கையில், கட்டுரைகளுக்காக யூனிகோட் எழுத்துருக்களையும்,  போட்டோஷாப்பில் டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டரில் டைட்டில்கள் கொடுக்க « பாமினி » எழுத்துருவையும் பயன்படுத்துவேன். இந்த எழுத்துருக்களுக்கு « எ-கலப்பை » யின் Phonetic தட்டச்சு உள்ளீட்டு முறையின் வாயிலாகத்தான் நான் உள்ளீடு செய்யவேண்டும். எனவே எனக்கு « எ-கலப்பை »  க்கான  தமிழ் யூனிகோட் மற்றும் பாமினி எழுத்துருக்குமான இரண்டு   கோப்பை நான் அழகியில் இணைத்தால் மட்டுமே என்னால் « எ-கலப்பை »  யின் படி தட்டச்சு செய்ய இயலும். இதில் யூனிகோட் தட்டச்சிற்கு அழகியில் டீபாள்ட்டாக  « எ-கலப்பை »  க்கான கோப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பாமினி,செந்தமிழ்,டாம்,டேப் etc….போன்றவற்றிற்கு ?

அழகியின் சிறப்பம்சமே அதன் சேவைதான் !! எனவே, அழகி இணையதளத்தின் மூலமாக நமக்கு தேவைப்படும் எழுத்துருக்கான தட்டச்சு முறை கோப்பை நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

சரி இப்போது செயல்முறைக்கு போகலாம் !

முதலில் நான் அழகியை இயக்குகிறேன். எனக்கு இங்கு யூனிகோடில் டைப் செய்ய, எ-கலப்பை எழுதியின் தட்டச்சு முறை இருக்கிறது. அதாவது UserDefinedPhonetics1 என்பது « எ-கலப்பை » க்கான முறையாகும்.



ஆனால் இதே « பாமினி « எழுத்துருவை நான் « எ-கலப்பை »  முறையில் பயன்படுத்த எனக்கு பாமினியில் UserDefinedPhonetics1 எனக்கு இல்லை.

பார்க்க கீழேயுள்ள படம் :





கவலையே வேண்டாம் இப்பொது நாம் அழகியின் இணையதளம் சென்று

 https://www.azhagi.com/xmls/#steps லிருந்து xmls-all.zip  கோப்புகளை பதிவிறக்கிக்கொள்ளலாம்.



குறிப்பு : இதில் சிறப்பம்சம் என்னவென்றால் புதிய புதிய எழுத்துருக்களுக்கான கோப்புகளை இங்கு உடனடியாக Update செய்து வைத்திருப்பதேயாகும். ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் xml கோப்பு தரப்படவில்லையென்றால், உடனடியாக அழகியின் ஆசிரியரை(contacts.azhagi.com) அழகி முகநூல் குழுமம் - https://www.facebook.com/groups/Azhagi - வாயிலாக தொடர்புகொண்டு தெரிவித்தால், உங்களுக்கான கோப்பை உடனடியாக அனுப்பி வைப்பார்கள். 

 பதிவிறக்கம் முடிந்தவுடன்  நான் கோப்புகளை extract செய்துகொண்டு எனக்கு இங்கு « பாமினி « எழுத்துருக்கான UserDefinedPhonetics1 ஐ காப்பி செய்துகொள்கிறேன்.



பின்னர் AzhagiPlus-Portable போல்டரை திறந்து பின்னர் azxml’s என்ற போல்டரில்  உங்களது காப்பி செய்யப்பட்ட கோப்பை பேஸ்ட் செய்யவும்.


அவ்வளவுதான் இப்போது அழகியை இயக்கி « பாமினி » எழுத்துருவை தேர்வு செய்ய எனக்கு UserDefinedPhonetics1  கிடைக்கப்பெற்று நான் பாமினி எழுத்துக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்துகொள்ளலாம்.



குறிப்பு : இம்முறையில் xml கோப்புகளை நிறுவுவது, அழகி install செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் Edition- க்கும் வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது முந்தைய கட்டுரை https://nithiclicks.blogspot.com/2020/08/tanglish-1.html


For more info : https://portable.azhagi.com

                         https://portabletam.azhagi.com

நன்றி

நித்தி ஆனந்த்

ஒளிப்படக்கலைஞர்

பிரான்ஸ்.

 

 

 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments