Saturday 9 October 2021

thumbnail

அழகியில் NHM தட்டச்சு முறையை பயன்படுத்துவது எப்படி?

 வணக்கம் நட்புகளே..சமீபத்தில் என்னிடம் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு என்னுடைய பதிலையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

கே : சார் ! நான் தமிழ் தட்டச்சிற்காக (Phonetic முறையில்) NHM தொகுப்பை பயன்படுத்துகிறேன். ஆனால் சமீபத்தில் அழகி+ மென்பொருளைப் பற்றி அறிந்துகொண்டேன். மேலும் அதை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், Phonetic தட்டச்சு முறையானது NHM ற்கும் அழகி க்கும் வேறுபடுமா ? அதாவது NHM இல் w என அடிக்க எனக்கு ந் கிடைக்கும் wa-, wi-நி, wii-நீ etc.

 

: கண்டிப்பாக முடியும். அதாவது அழகியின் தட்டச்சு முறையும் NHM தட்டச்சு முறையும் ஒரு சில இடங்களில் வேறுபடும். அழகியில் n/nh-ந், na/nha-, naa/nhaa-நா, etc..

 

ஆனால் NHM முறையை அப்படியே மாறாமல் அழகியில் தட்டச்சு செய்ய வழியுள்ளது. அழகி+ இயக்கிய பின் KeyboardLayout இல் UserDefinedPhonetics1 என்பதே NHM முறையில் தட்டச்சு செய்வதாகும். அதற்கான default shortcut key Alt+4(ஆல்ட்+4) ஆகும். அதாவது, அழகி இயக்கத்தில் உள்ளபோது, நீங்கள் எந்த அப்ளிகேஷன் சென்றும், Alt+4 shortcut key அழுத்தி, NHM phonetic முறையிலேயே, நீங்கள் தாராளமாக தங்க்லீஷில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம்.



 Alt+4 toggle key உங்களுக்கு ஏதுவாக இல்லையென்றால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான toggle keyற்கு (-ம்: F6, etc.) அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அல்லதுஅழகியின் Default Global Shortcut Key யான F10 (சில கணினிகளில் இது F11) பயன்படுத்தினாலும் சரியே.



இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். NHM, e-Kalappai, தகடூர் எழுதி இம்மூன்றும் ஒரே வகை Phonetic தட்டச்சு முறையாகும். எனவே இப்பயனாளர்கள் எவ்வித சிரமமுமின்றி அழகி+ பயன்படுத்தலாம்.

 

அழகியை பயன்படுத்தி பயன்பல பெறுவோம் !

அழகியின் சிறப்பம்சங்களை அனைவரிடமும் பகிர்வோம் !

நித்தி ஆனந்த்.

Tuesday 5 October 2021

thumbnail

அழகி+ இல் Global Hotkey பற்றி தெரியுமா ?

 வணக்கம் ! இக்கட்டுரையில் நாம் அழகி+ இன் Global Hotkey ஐ பற்றி தெரிந்துகொள்வோம் !. பொதுவாக அழகியில் சுமார் 40 க்கும் மேலான Font வகைகளை கையாள்கிறது என்பது அனைவரும் அறிந்ததே !. ஒவ்வொரு Font க்கும் ஒவ்வொரு toggle key யை அழகி சாப்ட்வேரிலேயே define செய்திருப்பார்கள்.

உதாரணமாக Tamil+Unicode+PhoneticTransliteration க்கு alt+3 என்ற கீயை default ஆக வைத்திருப்பார்கள். இந்த toggle key உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் விரும்பும் toggle key வடிவமைத்துக்கொள்ள அழகி +இல் ஆப்ஷனும் தந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

ஆனால் அழகி+ இல் மறைந்திருக்கும் மர்மமான F10 அல்லது F11 யை பற்றி உங்களுக்கு தெரியுமா ?.

அதாவது அழகி+ ல் நீங்கள் விரும்பும் எந்த ஒரு font மற்றும் லே-அவுட் ஐ தேர்வு செய்தபின் Global Hotkey யான F10 கீ யை அழுத்தி அப்படியே தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் தேர்வு செய்த font இல் தட்டச்சு ஆகும். யூனிகோட் எழுத்துரு என்றால் யூனிகோடிலும் செந்தமிழ் font ஐ தேர்வு செய்திருந்தால் செந்தமிழும் அப்படியே தட்டச்சு ஆகும். (இந்த Global Hotkey யனது எனது கணினியில் F10 ஆனால் சில கணினியில் இது F11 ஆகவும் இருக்கலாம்).






இந்த ஆப்ஷன் ஒரே Project இல் பல எழுத்துருக்களை பயன்படுத்தும் சூழலில் இருப்பவர்களுக்கு பயன்படும்.

உதாரணமாக ஒரு திருமண அழைப்பிதழ் தயாரிக்கும் டிசைனருக்கு ஒரே அழைப்பிதழில் செந்தமிழ், LTTM, Chenet Platinum போன்ற எழுத்துருக்கள் தேவைப்பட்டால் அழகி+ இன் Global Hotkey யான F10 என்ற ஒரே hotkey ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்துகொள்ளலாம்.

அழகியை பயன்படுத்தி பயன் பல பெறுவோம் !
அழகி பற்றி பிறரிடமும் பகிர்வோம்.
நித்தி ஆனந்த்.

Sunday 19 September 2021

thumbnail

அழகி + இல் உங்களுக்கான xml கோப்புகளை உருவாக்குவது எப்படி ?

 


அழகி + இல் உங்களுக்கான xml கோப்புகளை உருவாக்குவது எப்படி ?

இக்கட்டுரையில் நாம் நமக்கான xml கோப்புகளை உருவாக்குவது எப்படி என பார்க்கலாம்.

xml கோப்புகளை ஏன் உருவாக்கவேண்டும் ?

பொதுவாக அழகி மென்பொருளில் நமக்கு எளிமையான வகையில் தட்டச்சு செய்துகொள்ள ஏதுவாக அவர்களே xml கோப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளனர். ஆனால் அதில் நீங்கள் தட்டச்சு செய்ய  சில மாற்றங்கள் தேவையென்றால் நீங்களே இருக்கும் xml கோப்பில் எடிட் செய்து கொள்ளலாம்.

அழகியில், xml கோப்புகளானது, கணினியில் நிறுவப்பட்ட பதிப்பாக (Installed version ஆக) இருந்தால், "C:\Program Files (x86)\Azhagi+\azXMLs\Tamil UserDefinedPhonetics" என்ற இடத்திலும், போர்டபிள் பதிப்பாக (https://azhagi.com/steps-in-tamil-portable.html) இருந்தால்,

"AzhagiPlus-Portable\AzhagiPlus-Porto\azXMLs\Tamil UserDefinedPhonetics" என்ற போல்டரிலும், இருக்கும்.

இங்கு ஒரு விஷயத்தை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அழகியில் UserDefinedPhonetics என்பது e-கலப்பை, தகடூர் எழுதி முறையில் பயன்படுத்தும் தட்டச்சு முறையாகும். இம்முறையைத்தான் NHM Writer லும் பயன்படுத்துகிறார்கள். ஆக, NHM பயனாளர்களும் எவ்வித சிக்கலும் இல்லாமல் அழகியை பாவிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஏன் இதைப்பற்றி இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், NHM இல், தட்டச்சு செய்ய ஒரு செயலி, எழுத்துருக்களை மாற்றம் செய்ய ஒரு செயலி என இரு செயலிகளை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவவேண்டும். ஆனால் அழகி மென்பொருளை பொருத்தவரையில் ஒரே மென்பொருள் தட்டச்சு மற்றும் எழுத்துரு மாற்றி என இருபணிகளையும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி xml க்கு வருவோம்.

முதலில் நீங்கள் Notepad++ என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

https://notepad-plus-plus.org/downloads/

பின்னர் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் xml கோப்பை நோட்பேட்++ இல் திறக்கவும். இங்கே நான் தமிழில் UserDefinedPhonetics முறையை பயன்படுத்துகிறேன் (அதாவது தகடூர், e-கலப்பை, NHM).
எனவே நான் இங்கு C:\Program Files (x86)\Azhagi+\azXMLs\Tamil UserDefinedPhonetics இல் உள்ள AzhagiPlus-Tamil-Unicode-UserDefinedPhonetics1 என்ற xml கோப்பை தேர்வு செய்கிறேன்.



பின்னர் மவுஸில் ரைட்-கிளிக் செய்து இந்த கோப்பை நான் நோட்பேட் ++ இல் திறக்கிறேன்.


இப்போது எனது xml கோப்பானது நோட்பேட் ++ல் திறக்கிறது. இதில் நாம் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் <Mappings> என்ற செக்‌ஷனில் தான் நமக்கு தேவையான entry களை நாம் சேர்க்கவேண்டும்.

 




சரி இங்கு எனக்கு € குறியீடு தேவைப்படுகிறது. நான் இங்கு பிரான்ஸ் நாட்டில் வசிப்பதால் நான் தட்டச்சு செய்யும் டாக்குமெண்டுகளில் அதிகமாக € குறியீடு பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே அதற்கான entry யை  நான் இங்கு எப்படி சேர்க்கிறேன் என்று பாருங்கள்.

<Mappings> என்பது ஆரம்பம் </Mappings>என்பது முடிவு

ஆக நாம் கொடுக்கும் entry ஆனது இவ்விரு பகுதிகளுக்கு நடுவே தான் இருக்க வேண்டும்.

நான் புதியதாக சேர்க்க இருக்கும் entry ஐ </Mappings> க்கு மேலே கொடுக்கவிருக்கிறேன். அப்போதுதான் அழகியின் entry களை நான் தொந்தரவு செய்யாமல் எனது entry யை தனியாக கொடுக்கிறேன்.


 

இப்போது </Mappings > க்கு மேல் பகுதியில் நான் ஒரு புதிய பெயரில் ஒரு பகுதியை உருவாக்கி அதில் xml கோடிங்கை எழுதப்போகிறேன். இங்கு எனக்கு தேவையான entry களை நான் <custom> என்ற tag ஐ உருவாக்கி பின்னர் அதில் எனக்கு வேண்டிய entry ஐ எழுதுகிறேன்.

அழகியில் xml syntax ஆக <om> கொடுத்திருக்கிறார்கள். ஆகவே நானும் அதையே கொடுக்கிறேன். <om>euro €</om> அதாவது எனக்கு euro என அழுத்த € என வரவேண்டும் என இங்கு coding கொடுக்கிறேன். euro க்கு பிறகு ஒரு space கொடுத்து பின்னர் € வை தட்டச்சு செய்கிறேன்.

<om>euro(SPACE)€</om>

xml ஐ பொருத்தவரை ஒரு tag ஐ திறந்தால் அதை கட்டாயம் மூடவேண்டும்

<custom> என்பதை திறந்தேன் அல்லவா ? இப்போது எனது entry கள் முடிந்தப்பின்னர் நான் </custom> ஐ மூடுகிறேன். அதேபோல <om> என்ற syntax ஐயும் ஒவ்வொரு entry முடிந்த பிறகும் மூடவேண்டும்.

<Custom>

<om>euro €</om>

</Custom>

குறிப்பு : இங்கு நான் கொடுத்திருக்கும் euro எனது xml கோப்பில் வேறெங்கும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறாக ஒரே எழுத்துக்கள் 2 வகையான output க்கு வடிவமைத்தால் இரண்டாவதாக கொடுத்த Mapping தான் தட்டச்சு ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.


அவ்வளவுதான் இப்போது நான் நோட்பேட்++ இல் எனது கோப்பை ஐ சேமித்து (save செய்து) மூடுகிறேன்.


இப்போது அழகியைத் திறக்கிறேன். பின்னர், MS Word சென்று Alt+4 ஐ இயக்கி, தட்டச்சு செய்ய தொடங்குகிறேன்.


நான் euro என தட்டச்சு செய்யும்போது எனக்கு € என கிடைப்பதை பாருங்கள்.


அதேபோல அழகியால் ஏற்கெனவே define செய்யப்பட்டுள்ள எழுத்துகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்றவேண்டும் என்றாலும் அதனையும் மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணமாக, அழகியில் « ௐ » என்று தட்டச்சு செய்ய aum என்ற கீயை assign செய்துள்ளனர். உங்களுக்கு « A » என்பதை தட்டச்சு செய்தால் « ௐ » என்று வரவேண்டும் என விருப்பப்பட்டால் நீங்கள் xml கோப்பில் மாறுதலை செய்துகொள்ளலாம். அழகியில் « A » க்கு « ஆ » என்னும் எழுத்தை define செய்திருக்கிறார்கள். அதேபோல் « aa » என்ற எழுத்துகளுக்கும் « ஆ » என define செய்திருப்பதால் நாம் « A » என்பதை « ௐ » என மாற்றிக்கொள்ளலாம்.

பார்க்க கீழேயுள்ள படங்கள் :


இங்கே « ஆ » என்பதற்கு பதிலாக « ௐ » என்னும் எழுத்து மாற்றப்பட்டுள்ளது.


அவ்வளவுதான் நண்பர்களே! அழகியின் xml கோப்புகளை இப்படித்தான் உங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.

புதிய xml கோப்பை வடிவமைப்பது எப்படி ?

சரி அடுத்ததாக நீங்கள் சொந்தமாக ஒரு xml  கோப்பை உருவாக்கவேண்டுமெனில் (அதாவது அழகியின் xml கோப்பை பயன்படுத்தாமல் உருவாக்கவேண்டுமெனில்), அழகியில் அதுவும் சாத்தியமே!. ஆனால் இங்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவு செய்துகொள்ளவேண்டும்.

1.     கோப்புக்கான என்கோடிங்

2.     கோப்புக்கான பெயர்

இவ்விரண்டும் தான் முக்கியம். இல்லையென்றால் உங்களது xml கோப்பானது அழகியில் detect செய்யப்படாமல் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

முதலில் நோட்பேட் ++ ஐ திறக்கவும்.

பின்னர் நோட்பேட் ++ இல் Encoding menu வில் « UCS-2 LE BOM » என்ற என்கோடிங் முறையை தேர்வு செய்யவும்.


பின்னர் <Mappings> மற்றும் </Mappings> என தட்டச்சு செய்யவும். பார்க்க கீழேயுள்ள படம் :


இவ்விரு tag களுக்கு இடையே தான் நாம் xml கோடிங் எழுத இருக்கிறோம். இக்கட்டுரையில் நான் Hashtags களை வடிவமைக்க இருக்கிறேன். அதாவது நான் புகைப்படக்கலையை சார்ந்திருப்பதால் எனது புகைப்படங்களை முகநூலில் எனது படங்களை பதிவிடும்போது எனக்கு தேவையான ஹேஷ்டேகுகளை நான் இந்த கோப்பில் உருவாக்க இருக்கிறேன்.

<om>a #அழகு</om>
<om>ar #அருமை</om>
<om>p #புகைப்படக்கலை</om>
<om>c #NithiAnandPhotography</om>
<om>l #landscapephotography</om>
<om>o #ஒளிப்படக்கலை</om>
<om>P #photography</om>
<om>BW #blackandwhite</om>
<om>bw #கருப்புவெள்ளை</om>
<om>iy #இயற்கைகாட்சி</om>
<om>va #வானம்</om>


உங்களுக்கு வேண்டிய வகையில் xml எழுதியபின் அதனை சேமிக்கவேண்டும். அதாவது அழகியில் xml கோப்பை சேமிக்கும் போது LFK என்னும் சூத்திரத்தை மனப்பாடமாக வைத்திருக்கவேண்டும். அதன்படி தான் உங்களின் xml கோப்பிற்கு பெயரை கொடுக்கவேண்டும்.

AzhagiPlus-

L = Language
F = Font
K = Keyboard Layout

இங்கே எனக்கு L என்பது Tamil, F என்பது Unicode, K என்பதில் எனது கோப்பிற்கான பெயரைத் தருகிறேன். (L+F+K[Myfilename])
ஆக « AzhagiPlus-Tamil-Unicode-Hashtags.xml » என பெயரிட்டு சேமிக்கிறேன்.


கடைசியாக சேமித்த இந்தக் கோப்பை காப்பி செய்து C:\Program Files (x86)\Azhagi+\azXMLs போல்டரினுள் பேஸ்ட் செய்கிறேன்.


Portable Edition ஆக இருப்பின் AzhagiPlus-Portable\AzhagiPlus-Porto\azXMLs இல் பேஸ்ட் செய்யவும்.

இப்போது நான் அழகி+ ஐ திறக்கிறேன். இப்போது பாருங்கள். நான் உருவாக்கிய Hashtag xml கோப்பானது எனக்கு அழகியால் detect செய்யப்பட்டிருப்பதைப் பாருங்கள்.


இனி இந்த xml கோப்பிற்கான ஒரு ஷார்ட்-கட் key   புதிதாக நாம் aasign செய்ய வேண்டும். இங்கு நான் « F6 » என்ற கீயை தேர்வு செய்கிறேன். அதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல் பார்க்கலாம்.


குறிப்பு: ஒருவேளை உங்களது கணினியில், « F6 »  key அழகி+இல் ஏற்கனவே ஒரு ShortCut key-ஆக பயன்பாட்டில் இருந்தாலோ அல்லது விண்டோஸின் வேறு பயன்பாட்டிற்காக இந்த “F6” key  பயன்படுத்தப் பட்டிருந்தாலோ நீங்கள் வேறொரு key யை shortcut key-ஆக "Tamil+Unicode+Hashtags"-கிற்கு assign செய்துகொள்ளலாம். உதாரணமாக F3 அல்லது F5 etc…

இதனை நாம் இப்போது சோதித்துப்பார்க்கலாம். முகநூல் சென்று « F6» ஐ இயக்கி, பின் a, ar, va, c, etc. என தட்டச்சு செய்து சோதிக்கிறேன்.


வாவ் !!! இங்கே பாருங்கள்! அழகியில் உருவாக்கிய எனது Hashtag xml கோப்பு இங்கே மிகச்சரியாக எவ்வித பிழையுமின்றி வேலை செய்வதைப் பாருங்கள். இம்முறையைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் அவர்களுக்குத் தேவையான xml கோப்புகளை உருவாக்கி அதனை அழகியின் மூலமாக இணையத்தில், MS Office, Corel Draw, Photoshop, Adobe Premiere போன்ற எந்த செயலியிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சரி, இப்பொழுது இத்தருணத்தில், மற்றுமொரு  முக்கியமான விஷயத்தைப்  பகிர்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு F6 போன்று புதிதாக ஷார்ட்-கட் key ஒன்றை "Tamil+Unicode+Hashtags"க்கு assign செய்ய முடியவில்லை (அல்லது தெரியவில்லை) என்றால், கவலையே வேண்டாம்! அதற்கும் அழகி+இல் மிகவும் எளிதான ஒரு வழி உண்டு!!!

ஆமாம். அழகி+இல் F10 ஆனது Default Global ShortCut key-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல் பார்க்கலாம். சில கணினிகளில் இந்த Global ShortCut key F11 ஆகவும் இருக்கலாம். எனது கணினியில் இது F10 ஆக configure ஆகியுள்ளது. (அதாவது நீங்கள் அழகி + மென்பொருளை கணினியில் நிறுவும்போதே அல்லது அழகி+ போர்டபிள் பதிப்பை இயக்கும்போதே).


ந்த Global Shortcut key மூலம் நமக்கு ஒரு பெரிய நன்மை என்னவென்றால், நமக்குத் தேவையான LFK-வை (Language + Font + KeyboardLayout ஐ), அதாவது "மொழி + எழுத்துரு + கீபோர்ட் லே-அவுட் ஐ", அழகி+ இல் முதலிலேயே தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் எந்த மென்பொருளிலிலும் « F10 » (அல்லது F11) ஐ மட்டும் அழுத்தியே  நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த LFKவில் (அது எந்த LFK-வாக இருந்தாலும்) தட்டச்சு செய்து கொள்ளலாம். அதாவது, அழகி+ இல் உள்ள 700க்கும் மேற்பட்ட LFKக்களில் எந்த ஒரு LFKவில் தட்டச்சு செய்யவும், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரே ஷார்ட்-கட் கீ « F10 » (அல்லது F11) மட்டுமே.

இதனை நாம் இப்போது சோதித்துப்பார்க்கலாம். நான் அழகி + இல் முதலில் "Tamil+Unicode+Hashtags" ஐ தேர்வு செய்து கொள்கிறேன் (இதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல் பார்க்கலாம்.).


இப்பொழுது முகநூல் சென்று, அங்கு Global Shortcut key ஆன « F10 » ஐ அழுத்தி சோதிக்கிறேன். வாவ்! முன்னர், F6 அழுத்தி தட்டச்சு செய்தபொழுது என்ன சந்தோஷ அனுபவம் கிடைத்ததோ அதே  சந்தோஷ அனுபவமே இப்பொழுதும்! 😊😊


 

முக்கிய குறிப்பு: F10 (அல்லது F11) என்பது DEFAULT-ஆக அழகி+இல் Global Shortcut keyக்கு assign செய்யப்பட்டுள்ள key. வேண்டுமானால், இதையும் கூட நீங்கள், உங்கள் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் Global Shortcut keyக்கு F7 என்று கூட assign செய்து வைத்துக் கொள்ளலாம், அதுதான் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்றால்.

அழகியைப் பயன்படுத்திப் பயன் பெறுவோம். பலருக்கும் அதன் பயன்பாடுகளை எடுத்துச் சொல்வோம். 😊

என்றும் அன்புடன்,

நித்தி ஆனந்த்.

புகைப்படக்கலைஞர்,

பிரான்ஸ்.

Thursday 15 July 2021

thumbnail

808 FREE Tamil Unicode Fonts இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்

வணக்கம் நண்பர்களே, சமீபத்தில் இணையத்தில் தமிழ் இலவச ஒருங்குறி எழுத்துக்களின் சமீபத்திய வெளியீடுகளை பற்றி தேடிக்கொண்டிருந்தபோது என் கண்ணில் பட்ட இந்த 808 இலவச ஒருங்குறி எழுத்துருக்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம் சமீபத்திய வெளியீடுகள் என்றால் கண்டிப்பாக அதன் தரமானது கண்டிப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கும் 2018 ஆம் ஆண்டு வெயிடப்பட்ட இந்த எழுத்துக்களின் தொகுப்பில்,தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துரு வடிவங்கள், முறைபடுத்தப்பட்டுள்ள தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துரு அளவு வேறுபாடு, முறைபடுத்தப்பட்டுள்ள எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கிடையேயான அளவு வேறுபாடு போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

யூரோ,டாலர்,ரூபாய் களுக்கான குறியீடுகளையும் ஒருங்குறி எழுத்துக்களாகவே வடிவமைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ர், ரி, ரீ போன்றவற்றிற்கு துணையெழுத்தினைப் பயன்படுத்தாமல் சரியான 

முறையில் எழுத்துரு வடிவங்கள் வடிவமைக்கப்படுள்ளன.

அலுவலகப் பயன்பாடு, அச்சுத் துறைப் பயன்பாடு, மின்புத்தக வடிவமைப்பு, 

வலைத்தள வடிவமைப்பு,திறமூல மென்பொருள்கள், எம்.எஸ்,ஆபிஸ், அடோபி மென்பொருள்கள்(போட்டோஷாப்,இல்லஸ்டிரேட்டர்,இன்டிசைன்,பிரிமியர் போன்றவை..)  உள்ளிட்ட அனைத்து வகை மென்பொருள்களிலும் பயன்படுத்தத்தக்கது.

கணினிகள், செல்பேசிகள் மற்றும் கிண்டில் உள்ளிட்ட மின்புத்தக படிப்பான்கள் போன்றவற்றில் பயன்படுத்தத்தக்கவை.

அழகி (azhagi +), NHM Writter, e-கலப்பை போன்ற செயலிகளில் பயன்படுத்தலாம்.


பயன்படுத்திப்பாருங்கள்!!! பயன் பெறுங்கள்!!!

நித்தி ஆனந்த்,

புகைப்படக்கலைஞர்,

பிரான்ஸ்.

பதிவிறக்கம் செய்ய‌ :

Click Here






 

   

Saturday 3 July 2021

thumbnail

FACE OF INDIA By Nithi Anand Photography

 

Capturing Faces Of India That Reflected Myself


I usually focus on India for my portrait photography eventhough I'am living in France. Searching for a new challenge, I looked at India in the eyes, and I faced myself.

I tried to capture the emotions felt during the journey. I decided to do it my way, capturing my favorite subject: people. Stepping away from the landscapes and the incredible Indian colors and showing what for me was the real beauty of this country.





Thanks for Watching

Friday 2 July 2021

thumbnail

கூகுள் தமிழ் எழுத்துக்களை அழகி + உடன் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?

 கூகுள் தமிழ் எழுத்துக்களை அழகி + உடன் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?
வணக்கம் நண்பர்களே ! இன்றைய கட்டுரையில் போட்டோஷாப் 2021 இல் கூகுள் வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்களை போட்டோஷாப்பில் உங்களது டிசைனிங் வேலைகளுக்கு பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.
போட்டோஷாப் தனது 2020 ஆம் ஆண்டு பதிப்பில் "World-Ready Layout" ஐ அறிமுகம் செய்தது.  இதில் உலகில் பல மொழிகளை ஆதரிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. இதில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களும் அடக்கம்.
நான் ஏற்கனவே அழகி + பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என 3 பாகமாக கட்டுரை எழுதியிருந்தேன். அதனை (இங்கே,இங்கே,இங்கே) படிக்காதவர்கள் சென்று படிக்கவும். 

கூகுள் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
இப்போது அழகி + மென்பொருளை திறந்து உங்களது தட்டச்சு முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அழகி+ ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நான் இங்கு போனிடிக் முறையை தேர்ந்தெடுத்துள்ளேன்.
Toggle விசையை அழுத்தி அழகியை active வில் வைக்கவும். இப்போது உங்களது டாஸ்க் பாரில் அழகியின் icon ஆனது மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

இனி போட்டோஷாப்பை இயக்கவும்.

Edit மெனுவில் உள்ள Preference>Type செல்லவும். 

பின்னர் அதில் நான் தேர்வு செய்துள்ள World-Ready Layout ஐ தேர்வு செய்து ok செய்யவும்.


இப்போது Type டூலை தேர்வு செய்து கூகுள் எழுத்துருவை தேர்வு செய்து தட்டச்சு செய்ய துவங்குங்கள்.

இப்போது பாருங்கள் தமிழில் தட்டச்சு ஆகிறது ஆனால் எழுத்துக்கள் முறையாக தட்டச்சு ஆகவில்லை. சரி கவலை வேண்டாம்.


இப்போது Text Properties டூலை தேர்வு செய்து அதில் Paragraph ஐ தேர்வு செய்யவும்.

பின்னர் நான் படத்தில் காட்டியிருக்கும் குறியீடை அழுத்தி இப்போது World-Ready Layout ஐ தேர்வு செய்யவும் இப்போது உங்களது கூகுள் எழுத்துரு நேர்த்தியாக தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். அவ்வளவே....

அழகி + மூலமாக கூகுள் எழுத்துருக்களை போட்டோஷாப் (Photoshop) கோரல் டிரா போன்ற டிசைனிங் மென்பொருட்களிலும் மற்றும் எம்.எஸ் ஆபீஸ் (M.S.Office) தொகுப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நன்றி
அன்புடன்,
நித்தி ஆனந்த்
புகைப்படக்கலைஞர்
பிரான்ஸ்



Tuesday 29 June 2021

thumbnail

முத்தான 10 தமிழ் எழுத்துருக்கள் (Tamil Unicode Fonts)

முத்தான 10 தமிழ் எழுத்துருக்கள்(Tamil Unicode Fonts) 

இன்றைய தேதியில் இணையத்தில் பல தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றது யூனிகோட் மற்றும் லே-அவுட் எழுத்துருக்கள் என இரண்டு வகையாக கிடைக்கிறது. பொதுவாக டிசைனர்களாக பணிபுரிவோர்களுக்கு பல எழுத்துருக்கள் தேவைப்படும் ஆனால் சாமானியர்களுக்கு அவ்வளவு எழுத்துருக்களையும் கணினியில் நிரப்பிவைக்க வேண்டிய தேவை இருக்காது. அப்படிப்பட்டவர்கள் நச்சுனு ஒரு 10 எழுத்துருக்கள் போதும் என யோசிப்பார்கள். ஏன் நானும் அப்படித்தான் !. 

காரணம் எனக்கான தேவையே எம்.எஸ் வேர்டில் (M.S.Word) சில டாக்குமெண்டுகள் உருவாக்குவது மற்றும் இணைய மின்புத்தகங்களுக்காக கோப்புகளை உருவாக்குவது மட்டுமே. இதில் நமக்கு தேவையானது ஒருங்குறி எழுத்துக்கள் மட்டுமே. இதில் ஒருசிலர் கூகுள் டாக் பயன்படுத்துவார்கள். ஒருசிலர் எம்.எஸ்.ஆபீஸ் (M.S.Office) தொகுப்பு பயன்படுத்துவார்கள் !. 

 சமீபத்தில் கூட ஒரு அழகி+ பயனாளர் என்னிடம் பேசும்போது எம்.எஸ்.ஆபிஸ் (MS office) தொகுப்பில் பயன்படுத்த ஒரு 10 நல்ல எழுத்துருக்களை பரிந்துரை செய்யுங்கெளேன்னு என்னிடம் வினவினார். நானும் அவருக்கு பகிர்ந்த 10 முத்தான எழுத்துருக்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள்கிறேன். 

சமீபத்தில் தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக சில தேடுதல்களை செய்து கொண்டிருந்தபோது பாடசாலை இணையத்தை பார்வையிட்டேன். அங்கு அவர்கள் சில ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக அளித்திருந்தனர். அவைகளை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து எனக்கு பிடித்த 10 எழுத்துருக்களை கணினியில் நிறுவி இன்றும் அவைகளை பயன்படுத்தி வருகிறேன். 

 அழகி+  இன் உதவியோடு இவ்வெழுத்துருக்களை எம்.எஸ் ஆபீஸ் தொகுப்பில் எவ்வித சிக்கல் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இங்க சொடுக்கவும்.

குறிப்பு : இதில் TAU Marudham (மருதம்) தமிழக அரசால் அரசு அலுவகங்களில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட எழுத்துரு என்பது குறிப்பிடத்தக்கது.

அழகி+ ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Saturday 22 May 2021

thumbnail

Film roll Emulations





Hi Guys, Easily add film effects to your digital photos using my Filmlook preset. This preset let you emulate classic roll films such as Fuji Pro 160NS, Natura 1600, Superia 100, Kodak's Ektar 100, Gold -200, and more including Black & White films. Work in Adobe Camera Raw and Adobe Lightroom Classic. 

I strongly recommand to use with RAW files than a jpg to maintain the quality of your workflow. Regards, Nithi Anand Feel free to contact me if you are interested on it.

Instagram : @android.nithi 
e-mail : nithiclicks@gmail.com 

 Here is the slide show of my Film roll Emulation.

Friday 5 February 2021

thumbnail

Nithi's Foodie preset for Food Photography

Dear friends, If you are a food photographer want to explore your clicks in social media (facebook story, whatsapp Staus, instagram post and Story) or your website this preset will help you a lot. If you dont know photoshop editing a lot here is the preset whick boost up your color in single click. You can use it on your raw file and jpg files in Adobe camera raw,Photoshop, and Lightroom.
if you want to buy this preset contact me through my e-mail : android.nithi@gmail.com

Wednesday 23 December 2020

thumbnail

Class X CBSE Model Question Papers 2021 New Pattern

 

cbse syllabus reduction 2021,cbse,cbse class 10 sst question paper 2021,cbse class 10th french question paper 2021,cbse class 10 social science question paper 2020,cbse class 10th social science question paper 2020,cbse class 10 maths question paper,cbse class 10 maths question paper solution,cbse std X french question paper analysis,cbse sample paper 2021,cbse board class 10 french question paper solution,cbse class 10 syllabus 2021,cbse sample paper class 10 2021



Hello World !!! I'am Nithi Anand from France taking french classes through Skype and Whatsapp.




Dear Parents of students of class X CBSE,

There are some of the question papers prepared by me for your children.

I hope these will be useful for your children as during this COVID-19 situation most of the patterns have changed in particularly in French language. As of  now we have only one sample paper from the CBSE officially and students need more practice according to the latest pattern. Your children needed because for the last year and the previous year children had atleast last five years question papers for practice. This will enhance their skills in French, but for this yearbatch 2020-21 students need more question papers like this.

Here is my Sample Question paper :