Saturday, 9 October 2021

thumbnail

அழகியில் NHM தட்டச்சு முறையை பயன்படுத்துவது எப்படி?

 வணக்கம் நட்புகளே..சமீபத்தில் என்னிடம் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு என்னுடைய பதிலையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

கே : சார் ! நான் தமிழ் தட்டச்சிற்காக (Phonetic முறையில்) NHM தொகுப்பை பயன்படுத்துகிறேன். ஆனால் சமீபத்தில் அழகி+ மென்பொருளைப் பற்றி அறிந்துகொண்டேன். மேலும் அதை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், Phonetic தட்டச்சு முறையானது NHM ற்கும் அழகி க்கும் வேறுபடுமா ? அதாவது NHM இல் w என அடிக்க எனக்கு ந் கிடைக்கும் wa-, wi-நி, wii-நீ etc.

 

: கண்டிப்பாக முடியும். அதாவது அழகியின் தட்டச்சு முறையும் NHM தட்டச்சு முறையும் ஒரு சில இடங்களில் வேறுபடும். அழகியில் n/nh-ந், na/nha-, naa/nhaa-நா, etc..

 

ஆனால் NHM முறையை அப்படியே மாறாமல் அழகியில் தட்டச்சு செய்ய வழியுள்ளது. அழகி+ இயக்கிய பின் KeyboardLayout இல் UserDefinedPhonetics1 என்பதே NHM முறையில் தட்டச்சு செய்வதாகும். அதற்கான default shortcut key Alt+4(ஆல்ட்+4) ஆகும். அதாவது, அழகி இயக்கத்தில் உள்ளபோது, நீங்கள் எந்த அப்ளிகேஷன் சென்றும், Alt+4 shortcut key அழுத்தி, NHM phonetic முறையிலேயே, நீங்கள் தாராளமாக தங்க்லீஷில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம்.



 Alt+4 toggle key உங்களுக்கு ஏதுவாக இல்லையென்றால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான toggle keyற்கு (-ம்: F6, etc.) அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அல்லதுஅழகியின் Default Global Shortcut Key யான F10 (சில கணினிகளில் இது F11) பயன்படுத்தினாலும் சரியே.



இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். NHM, e-Kalappai, தகடூர் எழுதி இம்மூன்றும் ஒரே வகை Phonetic தட்டச்சு முறையாகும். எனவே இப்பயனாளர்கள் எவ்வித சிரமமுமின்றி அழகி+ பயன்படுத்தலாம்.

 

அழகியை பயன்படுத்தி பயன்பல பெறுவோம் !

அழகியின் சிறப்பம்சங்களை அனைவரிடமும் பகிர்வோம் !

நித்தி ஆனந்த்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments