Thursday 11 June 2020

thumbnail

DIY – Light tent கற்றதும்,பெற்றதும்

வணக்கம் மக்கா நலமா இன்றைய கட்டுரையானது tabletop புகைப்படக்கலைக்குத் தேவையான ஒரு Light tent ஐ நாமாக உருவாக்கி அதில் படமெடுப்பது எப்படி என பார்க்க இருக்கிறோம் !

 கற்றது : ஓரிரு வருடங்களுக்கு முன் நான் உறுப்பினராக இருக்கும் ஒரு பிரபல பிரெஞ்சு புகைப்படக்குழுவில் சாதாரண அட்டைப்பெட்டியை எப்படி light tentஆக‌ மாற்றி அதில் உணவுபொருட்களை flash உதவியுடன் படமெடுக்கலாம் என விளக்கியிருந்தனர். ஆனால் அப்போது என்னிடம் flash மற்றும் flash trigger இல்லாததால் அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை, ஆனால் சமீபத்தில் என்னுடைய நண்பர் திரு.பாபுராஜ் அவர்கள் அவரது trigger ஐ என்னிடம் சோதனைக்காக அளித்திருந்தார், அதனை வைத்து சில portraitகளை சோதித்த பின்னர் எனக்குத் திடீரென இந்த Light tent ன் ஞாபகம் வந்தது, ஆனால் நமக்கு இந்த வெட்டிங்ஸ்,ஒட்டிங்ஸ் போன்றவைகளுக்கு எல்லாம் நேரம் கிடையாது என்று +1 படிக்கும் பக்கத்துவீட்டு பையன் மதன்குமாரை அழைத்து அவனிடம் கூறினேன், “அரையாண்டு லீவுல‌ அசால்டா செஞ்சிடலாம் அண்ணா”னு சொன்னவன் சரியா அண்ணாச்சி கடையில இருந்து கொண்டு வந்த ஒரு அட்டை பாக்ஸை காட்டி இது “ஓகேவா” னு கேட்டான் “டபுள் ஓகே” னு சொன்னதும் வேலைல இறங்கிட்டான்.

 அதாவது அட்டைப்பெட்டியின் அடிப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளை வெட்டி எடுத்து அப்பகுதியை tissue பேப்பர் கொண்டு ஒட்டி கொடுத்துவிட்டான். tissue பேப்பருக்கு பதிலாக baking பேப்பரையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த tissue பேப்பர் எனக்கு, எனது பிளாஷ் வெளிப்படுத்தும் harsh light ஐ சாப்ட்லைட்டாக மாற்றித்தரும் diffuser ஆக‌ வேலைசெய்யும். கீழேயிருக்கும் படத்தை உங்கள் கண்கள் பார்த்தாலே போதும் கைகள் தானாக உருவாக்கிவிடும் என்பதால்Light tent உருவாக்குவது குறித்த விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.





 ஒருவழியாக Light Tent தயாரகிவிட்டது,என்னைவிட ஆர்வமாக இருக்கிறான் மதன்குமார், “படங்கள் எடுத்து பார்த்திடலாமா அண்ணா” னு அன்றைய அவனது கிரிக்கெட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டு என்னுடனே இருந்தான். என்னுடைய பிளாஷை நான் இங்கு flash triggerமூலமாக wireless ஆக fire செய்ய இருப்பதால் எனது பிளாஷை tripodல் பொருத்தி மேலிருந்து கீழாக வைக்கிறேன் (top angle) பார்க்க கீழேயுள்ள படங்கள்:



படம்பிடிக்க இருக்கும் பொருளின் முன்புலம் மற்றும் பின்புலம் எந்த நிறத்தில் வேண்டும் என்பதனை உறுதி செய்துகொள்ளுங்கள் பொதுவாக ஒன்று வெள்ளை அல்லது கருப்பு நிறம் இதுபோன்ற புகைப்படங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு நான் மாணவர்கள் வரைபடங்களுக்கு பயன்படுத்தும் வெள்ளை நிற chart பேப்பரை எனது Light Tentல் விரித்து அதன் மீது என்னுடைய பொருளை வைக்கிறேன். நீங்கள் படம்பிடிக்க இருக்கும் பொருளின் பிரதிபலிப்பும் (reflection) உங்களுக்கு தேவையென்றால் கண்ணாடித்துண்டுகளைப் பயன்படுத்தி அதன்மீது பொருளை வைத்து படம்பிடிக்கலாம்.

உங்களின் Light Tentன் அளவை பொருத்து கண்ணாடிக்கடையில் கேட்டால் அவர்களே கண்ணாடித்துண்டை வெட்டிக்கொடுப்பார்கள். மேலும் ஒருவிஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அதாவது என்னுடைய Digitek flash ஆனது வெறும் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மேனுவல் flash ஆகும்.இது உங்களது கேமரா செட்டிங்ஸ் உடன் synchronize ஆகாது எனவே எந்த அளவிற்கு flash, fire செய்யவேண்டும் என்பதனை உங்களது கேமரா செட்டிங்ஸை பொறுத்து தான் flashல் செட்செய்யவேண்டும்.

 கேமரா,லென்ஸ்,செட்டிங்ஸ்: இங்கு நான் எனது Canon 100D யுடன் Canon EF-50mm F1.8 II லென்ஸை பயன்படுத்துகிறேன், நான் F8,1/200,ISO100ல் படம்பிடிக்கிறேன், முதல் படத்தின் histogram ஐ வைத்தே , நீங்களே flash lightன் அளவை மேனுவலாக‌ அட்ஜெஸ்ட் செய்துகொள்வீர்கள், பொதுவாக flashகளின் துணையுடன் எடுக்கும் படங்களுக்கு உங்களது ஷட்டர் வேகம் 1/200 ஐ தாண்டக்கூடாது அதற்க்கு மேல் உங்களது ஷட்டர் வேகம் கேமராவோடு synchronizeஆகாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்களது அப்பச்சரின் அளவு நீங்கள் விரும்பும் depth of fieldஐ பொறுத்து அமைத்துக்கொள்ளுங்கள் J.
சரி இனி தைரியமாக களத்தில் இறங்குவோம்.

பெற்றது:


 முதல் படம் என்னுடைய குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்த தக்காளி பழங்களை எடுத்தேன்.



 அடுத்ததாக என்னோட favorite Danish Butter cookies :




பிறகு தோட்டத்தில் பறித்த சாமந்திப்பூ:


கடைசியாக அம்மாவின் சில சமையலறை அயிட்டங்கள்:




மேலே பார்த்த படங்கள் அனைத்தும் இந்த Light tentல் எடுக்கப்பட்ட படங்களே பிற்சேர்க்கை என்று பெரிய அளவில் செய்யவில்லை வெறும் Levels adjustments ஐ கொண்டு கொஞ்சம் tone correction மட்டுமே செய்துகொண்டேன். அவ்வளவுதான் மக்கா மிக சுலபமாக செலவில்லாத Light Tent மூலமாக விலைகுறைந்த லென்ஸுடன்,சாதாரண மேனுவல் flash கொண்டு table top புகைப்படங்கள் எடுப்பது எப்படி என அறிந்துகொண்டீர்களா? இந்தமுறையில் நீங்கள் ice cream parlor, restaurant, bakery, toy shop போன்றவற்றிற்கோ அல்லது சமையல் குறிப்பு போன்ற இணையதளங்களுக்கு இதுமாதிரி படங்களை எடுத்துக்கொடுத்து வருமானமும் ஈட்டிக்கொள்ளலாம்,சிறிய முதலீட்டில் பணம் சம்பாதிக்க ஏதுவாக இப்பதிவு உங்களில் ஒருவருக்காவது பயன்பெற்றால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாகும். மீண்டும் சந்திப்போம்...
 என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்
Tags :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments