Thursday 10 September 2020

thumbnail

தகடூர் எழுதியை அழகியின் துணைக்கொண்டு Google Docs இல் பயன்படுத்துவது எப்படி?

 

வணக்கம் நண்பர்களே இன்றைய கட்டுரையில் நாம் அழகி மென்பொருளை பயன்படுத்தி Google Docs -இல் எவ்வாறு தங்லிஷ் தட்டச்சு செய்யலாம் எனப்பார்க்கலாம். 

பொதுவாக கூகுள் நிறுவனமே Google input என்ற செயலி மூலமாக தமிழில் தங்லிஷ் தட்டச்சு செய்யும் வசதியினை நமக்கு கொடுத்துள்ளனர் பிறகு எதற்காக  இக்கட்டுரை என கேட்கிறீர்களா? உங்களின் கேள்வி சரியே !! எனினும் இங்கு ஒரு பயனுள்ள சிறப்பம்சத்தை “அழகி” மென்பொருள் வழங்கியுள்ளதால் இங்கு நான் அழகியை சிபாரிசு செய்கிறேன். அழகியை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

நான் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய தமிழ் கட்டுரைகளை தங்லிஷ் முறையிலேயே தட்டச்சு செய்துவருகிறேன். அதற்காக நான் பயன்படுத்தும் எழுதி “தகடூர்” எழுதியாகும். இந்த தகடூர் எழுதியில் தட்டச்சு செய்வதற்க்கும் கூகுள் இன்புட்டில் தட்டச்சு செய்வதற்க்கும் சில வேறுபாடுகள் உள்ளன. 

உதாரணமாக தகடூர் எழுதியில் “ந்” மற்றும் “ந” போன்ற எழுத்துக்களுக்கு “w” என்ற விசையைப்பயன்படுத்தவேண்டும். ஆனால் Google Input- டிலோ “nh” போன்றவிசைகளை பயன்படுத்தினால்தான் “ந்” மற்றும் “ந” போன்ற எழுத்துக்களைப் பெறமுடியும். 

இதேபோல் “சிற்சில” வேறுபாடுகள் இரண்டிற்க்குமிடையே இருப்பதால் கூகுளில் தட்டச்சு செய்யும்போழுது எனக்கு அடிக்கடி தடுமாற்றம் ஏற்படும். ஆனால் “அழகி” மென்பொருள் மூலமாக ஒரு சிறிய செட்டிங்கை செய்துகொண்டால் Google Input-ல் தடுமாற்றம் இல்லாமல் தகடூர் எழுதியை பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஆக அழகியில் எவ்வளவோ சிறப்பம்சங்கள் இருப்பதால் எனக்கு ஏற்பட்ட இந்த தட்டச்சு  தடுமாற்றத்தை அழகி மூலமாக சரி செய்துகொண்டேன். நன்றிகள் பல 

முதலில் அழகி மென்பொருளை இயக்கவும். பின்னர் நான் கீழே செய்துள்ள செட்டிங்குகளை செய்துகொள்ளவும்.


குறிப்பு : இங்கு “Tamil+Unicode+UserDefinedPhonetics1” என்பது தகடூர் எழுதியின் விசைப்பலகையின் லே-அவுட்  ஆகும். 

இப்பொழுது அழகியில் Alt+4 என்ற விசைகளை அழுத்த எனக்கு தமிழ் விசைப்பலகை ஆக்டிவேட் செய்யப்பட்டு தங்லிஷ் தட்டச்சுக்கு தயாராக இருக்கிறது.



இப்போது கூகுள் டாக்ஸ் சென்று தட்டச்சு செய்ய துவங்குங்கள். கூகுள் டாக்ஸ் தகடூர் எழுதி முறையில் தட்டச்சு செய்யப்படும். இம்முறை தகடூர் எழுதியில் தமிழ் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு மிக இலகுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நன்றி!!! வணக்கம்!!!

நித்தி ஆனந்த்

https://www.flickr.com/photos/nithiclicks/


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments