Thursday, 15 July 2021

thumbnail

808 FREE Tamil Unicode Fonts இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்

வணக்கம் நண்பர்களே, சமீபத்தில் இணையத்தில் தமிழ் இலவச ஒருங்குறி எழுத்துக்களின் சமீபத்திய வெளியீடுகளை பற்றி தேடிக்கொண்டிருந்தபோது என் கண்ணில் பட்ட இந்த 808 இலவச ஒருங்குறி எழுத்துருக்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம் சமீபத்திய வெளியீடுகள் என்றால் கண்டிப்பாக அதன் தரமானது கண்டிப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கும் 2018 ஆம் ஆண்டு வெயிடப்பட்ட இந்த எழுத்துக்களின் தொகுப்பில்,தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கு நிகரான ஆங்கில எழுத்துரு வடிவங்கள், முறைபடுத்தப்பட்டுள்ள தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துரு அளவு வேறுபாடு, முறைபடுத்தப்பட்டுள்ள எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கிடையேயான அளவு வேறுபாடு போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

யூரோ,டாலர்,ரூபாய் களுக்கான குறியீடுகளையும் ஒருங்குறி எழுத்துக்களாகவே வடிவமைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ர், ரி, ரீ போன்றவற்றிற்கு துணையெழுத்தினைப் பயன்படுத்தாமல் சரியான 

முறையில் எழுத்துரு வடிவங்கள் வடிவமைக்கப்படுள்ளன.

அலுவலகப் பயன்பாடு, அச்சுத் துறைப் பயன்பாடு, மின்புத்தக வடிவமைப்பு, 

வலைத்தள வடிவமைப்பு,திறமூல மென்பொருள்கள், எம்.எஸ்,ஆபிஸ், அடோபி மென்பொருள்கள்(போட்டோஷாப்,இல்லஸ்டிரேட்டர்,இன்டிசைன்,பிரிமியர் போன்றவை..)  உள்ளிட்ட அனைத்து வகை மென்பொருள்களிலும் பயன்படுத்தத்தக்கது.

கணினிகள், செல்பேசிகள் மற்றும் கிண்டில் உள்ளிட்ட மின்புத்தக படிப்பான்கள் போன்றவற்றில் பயன்படுத்தத்தக்கவை.

அழகி (azhagi +), NHM Writter, e-கலப்பை போன்ற செயலிகளில் பயன்படுத்தலாம்.


பயன்படுத்திப்பாருங்கள்!!! பயன் பெறுங்கள்!!!

நித்தி ஆனந்த்,

புகைப்படக்கலைஞர்,

பிரான்ஸ்.

பதிவிறக்கம் செய்ய‌ :

Click Here






 

   

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments