வணக்கம் ! இக்கட்டுரையில் நாம் அழகி+ இன் Global Hotkey ஐ பற்றி தெரிந்துகொள்வோம் !. பொதுவாக அழகியில் சுமார் 40 க்கும் மேலான Font வகைகளை கையாள்கிறது என்பது அனைவரும் அறிந்ததே !. ஒவ்வொரு Font க்கும் ஒவ்வொரு toggle key யை அழகி சாப்ட்வேரிலேயே define செய்திருப்பார்கள்.
உதாரணமாக Tamil+Unicode+PhoneticTransliteration க்கு alt+3 என்ற கீயை default ஆக வைத்திருப்பார்கள். இந்த toggle key உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் விரும்பும் toggle key வடிவமைத்துக்கொள்ள அழகி +இல் ஆப்ஷனும் தந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் அழகி+ இல் மறைந்திருக்கும் மர்மமான F10 அல்லது F11 யை பற்றி உங்களுக்கு தெரியுமா ?.
அதாவது அழகி+ ல் நீங்கள் விரும்பும் எந்த ஒரு font மற்றும் லே-அவுட் ஐ தேர்வு செய்தபின் Global Hotkey யான F10 கீ யை அழுத்தி அப்படியே தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் தேர்வு செய்த font இல் தட்டச்சு ஆகும். யூனிகோட் எழுத்துரு என்றால் யூனிகோடிலும் செந்தமிழ் font ஐ தேர்வு செய்திருந்தால் செந்தமிழும் அப்படியே தட்டச்சு ஆகும். (இந்த Global Hotkey யனது எனது கணினியில் F10 ஆனால் சில கணினியில் இது F11 ஆகவும் இருக்கலாம்).
இந்த ஆப்ஷன் ஒரே Project இல் பல எழுத்துருக்களை பயன்படுத்தும் சூழலில் இருப்பவர்களுக்கு பயன்படும்.
உதாரணமாக ஒரு திருமண அழைப்பிதழ் தயாரிக்கும் டிசைனருக்கு ஒரே அழைப்பிதழில் செந்தமிழ், LTTM, Chenet Platinum போன்ற எழுத்துருக்கள் தேவைப்பட்டால் அழகி+ இன் Global Hotkey யான F10 என்ற ஒரே hotkey ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்துகொள்ளலாம்.
அழகியை பயன்படுத்தி பயன் பல பெறுவோம் !
அழகி பற்றி பிறரிடமும் பகிர்வோம்.
நித்தி ஆனந்த்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments