அழகி + இல் உங்களுக்கான xml கோப்புகளை
உருவாக்குவது எப்படி ?
இக்கட்டுரையில்
நாம் நமக்கான xml கோப்புகளை உருவாக்குவது எப்படி என பார்க்கலாம்.
xml கோப்புகளை
ஏன் உருவாக்கவேண்டும் ?
பொதுவாக அழகி
மென்பொருளில் நமக்கு எளிமையான வகையில் தட்டச்சு செய்துகொள்ள ஏதுவாக அவர்களே xml கோப்புகளை
உருவாக்கி கொடுத்துள்ளனர். ஆனால் அதில் நீங்கள் தட்டச்சு செய்ய சில மாற்றங்கள் தேவையென்றால் நீங்களே இருக்கும்
xml கோப்பில் எடிட் செய்து கொள்ளலாம்.
அழகியில்,
xml கோப்புகளானது, கணினியில் நிறுவப்பட்ட பதிப்பாக (Installed version ஆக) இருந்தால்,
"C:\Program Files (x86)\Azhagi+\azXMLs\Tamil UserDefinedPhonetics" என்ற
இடத்திலும், போர்டபிள் பதிப்பாக (https://azhagi.com/steps-in-tamil-portable.html) இருந்தால்,
"AzhagiPlus-Portable\AzhagiPlus-Porto\azXMLs\Tamil
UserDefinedPhonetics" என்ற போல்டரிலும், இருக்கும்.
இங்கு ஒரு விஷயத்தை
உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அழகியில்
UserDefinedPhonetics என்பது e-கலப்பை, தகடூர் எழுதி முறையில் பயன்படுத்தும் தட்டச்சு
முறையாகும். இம்முறையைத்தான் NHM Writer லும் பயன்படுத்துகிறார்கள். ஆக, NHM பயனாளர்களும்
எவ்வித சிக்கலும் இல்லாமல் அழகியை பாவிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஏன் இதைப்பற்றி
இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், NHM இல், தட்டச்சு செய்ய ஒரு செயலி, எழுத்துருக்களை
மாற்றம் செய்ய ஒரு செயலி என இரு செயலிகளை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவவேண்டும்.
ஆனால் அழகி மென்பொருளை பொருத்தவரையில் ஒரே மென்பொருள் தட்டச்சு மற்றும் எழுத்துரு மாற்றி
என இருபணிகளையும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி xml க்கு
வருவோம்.
முதலில் நீங்கள்
Notepad++ என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
https://notepad-plus-plus.org/downloads/
பின்னர் நீங்கள்
எடிட் செய்ய விரும்பும் xml கோப்பை நோட்பேட்++ இல் திறக்கவும். இங்கே நான் தமிழில்
UserDefinedPhonetics முறையை பயன்படுத்துகிறேன் (அதாவது தகடூர், e-கலப்பை, NHM).
எனவே நான் இங்கு C:\Program Files (x86)\Azhagi+\azXMLs\Tamil
UserDefinedPhonetics இல் உள்ள AzhagiPlus-Tamil-Unicode-UserDefinedPhonetics1 என்ற
xml கோப்பை தேர்வு செய்கிறேன்.
பின்னர் மவுஸில்
ரைட்-கிளிக் செய்து இந்த கோப்பை நான் நோட்பேட் ++ இல் திறக்கிறேன்.
இப்போது எனது
xml கோப்பானது நோட்பேட் ++ல் திறக்கிறது. இதில் நாம் மாற்றம் செய்ய வேண்டுமென்றால்
<Mappings> என்ற செக்ஷனில் தான் நமக்கு தேவையான entry களை நாம் சேர்க்கவேண்டும்.
சரி இங்கு எனக்கு
€ குறியீடு தேவைப்படுகிறது. நான் இங்கு பிரான்ஸ் நாட்டில் வசிப்பதால் நான் தட்டச்சு
செய்யும் டாக்குமெண்டுகளில் அதிகமாக € குறியீடு பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே
அதற்கான entry யை நான் இங்கு எப்படி சேர்க்கிறேன்
என்று பாருங்கள்.
<Mappings>
என்பது ஆரம்பம் </Mappings>என்பது முடிவு
ஆக நாம் கொடுக்கும்
entry ஆனது இவ்விரு பகுதிகளுக்கு நடுவே தான் இருக்க வேண்டும்.
நான் புதியதாக
சேர்க்க இருக்கும் entry ஐ </Mappings> க்கு மேலே கொடுக்கவிருக்கிறேன். அப்போதுதான்
அழகியின் entry களை நான் தொந்தரவு செய்யாமல் எனது entry யை தனியாக கொடுக்கிறேன்.
இப்போது
</Mappings > க்கு மேல் பகுதியில் நான் ஒரு புதிய பெயரில் ஒரு பகுதியை உருவாக்கி
அதில் xml கோடிங்கை எழுதப்போகிறேன். இங்கு எனக்கு தேவையான entry களை நான்
<custom> என்ற tag ஐ உருவாக்கி பின்னர் அதில் எனக்கு வேண்டிய entry ஐ எழுதுகிறேன்.
அழகியில் xml
syntax ஆக <om> கொடுத்திருக்கிறார்கள். ஆகவே நானும் அதையே கொடுக்கிறேன்.
<om>euro €</om> அதாவது எனக்கு euro என அழுத்த € என வரவேண்டும் என இங்கு
coding கொடுக்கிறேன். euro க்கு பிறகு ஒரு space கொடுத்து பின்னர் € வை தட்டச்சு செய்கிறேன்.
<om>euro(SPACE)€</om>
xml ஐ பொருத்தவரை
ஒரு tag ஐ திறந்தால் அதை கட்டாயம் மூடவேண்டும்
<custom>
என்பதை திறந்தேன் அல்லவா ? இப்போது எனது entry கள் முடிந்தப்பின்னர் நான்
</custom> ஐ மூடுகிறேன். அதேபோல <om> என்ற syntax ஐயும் ஒவ்வொரு entry
முடிந்த பிறகும் மூடவேண்டும்.
<Custom>
<om>euro €</om>
</Custom>
குறிப்பு :
இங்கு நான் கொடுத்திருக்கும் euro எனது
xml கோப்பில் வேறெங்கும் கொடுக்கப்படவில்லை.
அவ்வாறாக ஒரே எழுத்துக்கள்
2 வகையான
output க்கு வடிவமைத்தால் இரண்டாவதாக கொடுத்த Mapping தான் தட்டச்சு ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அவ்வளவுதான்
இப்போது நான் நோட்பேட்++ இல் எனது கோப்பை ஐ சேமித்து (save செய்து) மூடுகிறேன்.
இப்போது அழகியைத் திறக்கிறேன். பின்னர், MS Word சென்று Alt+4 ஐ இயக்கி, தட்டச்சு செய்ய
தொடங்குகிறேன்.
நான் euro என
தட்டச்சு செய்யும்போது எனக்கு € என கிடைப்பதை பாருங்கள்.
அதேபோல அழகியால்
ஏற்கெனவே define செய்யப்பட்டுள்ள எழுத்துகளை உங்களுக்கு ஏற்றார் போல மாற்றவேண்டும்
என்றாலும் அதனையும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக, அழகியில்
« ௐ » என்று தட்டச்சு செய்ய aum என்ற கீயை assign செய்துள்ளனர். உங்களுக்கு
« A » என்பதை தட்டச்சு செய்தால் « ௐ » என்று வரவேண்டும் என விருப்பப்பட்டால்
நீங்கள் xml கோப்பில் மாறுதலை செய்துகொள்ளலாம். அழகியில் « A » க்கு « ஆ »
என்னும் எழுத்தை define செய்திருக்கிறார்கள். அதேபோல் « aa » என்ற எழுத்துகளுக்கும்
« ஆ » என define செய்திருப்பதால் நாம் « A » என்பதை « ௐ »
என மாற்றிக்கொள்ளலாம்.
பார்க்க கீழேயுள்ள
படங்கள் :
இங்கே « ஆ » என்பதற்கு
பதிலாக « ௐ » என்னும் எழுத்து மாற்றப்பட்டுள்ளது.
அவ்வளவுதான்
நண்பர்களே! அழகியின் xml கோப்புகளை இப்படித்தான் உங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும்
ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.
புதிய xml கோப்பை வடிவமைப்பது எப்படி ?
சரி அடுத்ததாக
நீங்கள் சொந்தமாக ஒரு xml கோப்பை உருவாக்கவேண்டுமெனில்
(அதாவது அழகியின் xml கோப்பை பயன்படுத்தாமல் உருவாக்கவேண்டுமெனில்), அழகியில் அதுவும்
சாத்தியமே!. ஆனால் இங்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவு செய்துகொள்ளவேண்டும்.
1.
கோப்புக்கான
என்கோடிங்
2.
கோப்புக்கான
பெயர்
இவ்விரண்டும்
தான் முக்கியம். இல்லையென்றால் உங்களது xml கோப்பானது அழகியில் detect செய்யப்படாமல்
போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
முதலில் நோட்பேட்
++ ஐ திறக்கவும்.
பின்னர் நோட்பேட்
++ இல் Encoding menu வில் « UCS-2 LE BOM » என்ற என்கோடிங் முறையை தேர்வு
செய்யவும்.
பின்னர்
<Mappings> மற்றும் </Mappings> என தட்டச்சு செய்யவும். பார்க்க கீழேயுள்ள
படம் :
இவ்விரு
tag களுக்கு இடையே தான் நாம் xml கோடிங் எழுத இருக்கிறோம். இக்கட்டுரையில் நான்
Hashtags களை வடிவமைக்க இருக்கிறேன். அதாவது நான் புகைப்படக்கலையை சார்ந்திருப்பதால்
எனது புகைப்படங்களை முகநூலில் எனது படங்களை பதிவிடும்போது எனக்கு தேவையான ஹேஷ்டேகுகளை
நான் இந்த கோப்பில் உருவாக்க இருக்கிறேன்.
<om>a #அழகு</om>
<om>ar #அருமை</om>
<om>p #புகைப்படக்கலை</om>
<om>c #NithiAnandPhotography</om>
<om>l #landscapephotography</om>
<om>o #ஒளிப்படக்கலை</om>
<om>P #photography</om>
<om>BW #blackandwhite</om>
<om>bw #கருப்புவெள்ளை</om>
<om>iy #இயற்கைகாட்சி</om>
<om>va #வானம்</om>
உங்களுக்கு
வேண்டிய வகையில் xml எழுதியபின் அதனை சேமிக்கவேண்டும். அதாவது அழகியில் xml கோப்பை
சேமிக்கும் போது LFK என்னும் சூத்திரத்தை மனப்பாடமாக வைத்திருக்கவேண்டும். அதன்படி
தான் உங்களின் xml கோப்பிற்கு பெயரை கொடுக்கவேண்டும்.
AzhagiPlus-
L = Language
F = Font
K = Keyboard Layout
இங்கே எனக்கு L என்பது Tamil, F என்பது Unicode, K
என்பதில் எனது கோப்பிற்கான பெயரைத் தருகிறேன். (L+F+K[Myfilename])
ஆக
« AzhagiPlus-Tamil-Unicode-Hashtags.xml » என பெயரிட்டு சேமிக்கிறேன்.
கடைசியாக சேமித்த
இந்தக் கோப்பை காப்பி செய்து C:\Program Files (x86)\Azhagi+\azXMLs போல்டரினுள் பேஸ்ட்
செய்கிறேன்.
Portable
Edition ஆக இருப்பின் AzhagiPlus-Portable\AzhagiPlus-Porto\azXMLs இல் பேஸ்ட்
செய்யவும்.
இப்போது நான்
அழகி+ ஐ திறக்கிறேன். இப்போது பாருங்கள். நான் உருவாக்கிய Hashtag xml கோப்பானது எனக்கு
அழகியால் detect செய்யப்பட்டிருப்பதைப் பாருங்கள்.
இனி இந்த xml
கோப்பிற்கான ஒரு ஷார்ட்-கட் key
ஐ புதிதாக நாம் aasign செய்ய வேண்டும். இங்கு நான் « F6 » என்ற கீயை
தேர்வு செய்கிறேன். அதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல் பார்க்கலாம்.
குறிப்பு: ஒருவேளை உங்களது கணினியில், « F6 » key அழகி+இல் ஏற்கனவே ஒரு ShortCut key-ஆக
பயன்பாட்டில் இருந்தாலோ அல்லது விண்டோஸின் வேறு பயன்பாட்டிற்காக இந்த “F6” key பயன்படுத்தப் பட்டிருந்தாலோ நீங்கள் வேறொரு key யை shortcut key-ஆக "Tamil+Unicode+Hashtags"-கிற்கு
assign செய்துகொள்ளலாம்.
உதாரணமாக F3 அல்லது
F5 etc…
இதனை நாம் இப்போது சோதித்துப்பார்க்கலாம். முகநூல் சென்று « F6» ஐ இயக்கி, பின் a, ar, va, c, etc. என தட்டச்சு செய்து சோதிக்கிறேன்.
வாவ் !!! இங்கே பாருங்கள்! அழகியில் உருவாக்கிய எனது Hashtag xml கோப்பு இங்கே
மிகச்சரியாக எவ்வித பிழையுமின்றி வேலை செய்வதைப் பாருங்கள். இம்முறையைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும்
அவர்களுக்குத் தேவையான xml கோப்புகளை உருவாக்கி அதனை அழகியின் மூலமாக இணையத்தில்,
MS Office, Corel Draw, Photoshop, Adobe Premiere போன்ற எந்த செயலியிலும் பயன்படுத்திக்கொள்ள
முடியும்.
சரி, இப்பொழுது இத்தருணத்தில், மற்றுமொரு முக்கியமான விஷயத்தைப் பகிர்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால்
உங்களுக்கு F6 போன்று புதிதாக ஷார்ட்-கட் key ஒன்றை "Tamil+Unicode+Hashtags"க்கு assign செய்ய
முடியவில்லை (அல்லது தெரியவில்லை) என்றால்,
கவலையே வேண்டாம்! அதற்கும் அழகி+இல் மிகவும் எளிதான ஒரு வழி உண்டு!!!
ஆமாம். அழகி+இல் F10
ஆனது Default Global
ShortCut key-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல்
பார்க்கலாம். சில கணினிகளில் இந்த Global
ShortCut key F11 ஆகவும் இருக்கலாம்.
எனது கணினியில் இது F10 ஆக configure ஆகியுள்ளது. (அதாவது நீங்கள் அழகி + மென்பொருளை
கணினியில் நிறுவும்போதே அல்லது அழகி+ போர்டபிள் பதிப்பை இயக்கும்போதே).
இந்த Global
Shortcut key மூலம் நமக்கு ஒரு பெரிய நன்மை என்னவென்றால், நமக்குத்
தேவையான LFK-வை (Language + Font + KeyboardLayout ஐ), அதாவது "மொழி
+ எழுத்துரு + கீபோர்ட் லே-அவுட் ஐ", அழகி+ இல்
முதலிலேயே தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் எந்த மென்பொருளிலிலும் « F10 » (அல்லது F11) ஐ மட்டும்
அழுத்தியே நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த LFKவில் (அது எந்த
LFK-வாக
இருந்தாலும்) தட்டச்சு செய்து கொள்ளலாம். அதாவது, அழகி+ இல் உள்ள 700க்கும் மேற்பட்ட LFKக்களில் எந்த
ஒரு LFKவில் தட்டச்சு செய்யவும்,
நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரே ஷார்ட்-கட் கீ
« F10 » (அல்லது F11) மட்டுமே.
இதனை நாம் இப்போது
சோதித்துப்பார்க்கலாம். நான் அழகி + இல் முதலில் "Tamil+Unicode+Hashtags" ஐ தேர்வு
செய்து கொள்கிறேன் (இதை நீங்கள் கீழே உள்ள Screenshot-இல் பார்க்கலாம்.).
இப்பொழுது முகநூல்
சென்று, அங்கு Global Shortcut key ஆன « F10 » ஐ அழுத்தி சோதிக்கிறேன். வாவ்!
முன்னர், F6 அழுத்தி தட்டச்சு செய்தபொழுது என்ன சந்தோஷ அனுபவம் கிடைத்ததோ அதே சந்தோஷ அனுபவமே இப்பொழுதும்! 😊😊
முக்கிய
குறிப்பு: F10 (அல்லது
F11) என்பது DEFAULT-ஆக அழகி+இல் Global Shortcut keyக்கு assign செய்யப்பட்டுள்ள
key. வேண்டுமானால், இதையும் கூட நீங்கள், உங்கள் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் Global Shortcut keyக்கு F7 என்று கூட assign செய்து வைத்துக்
கொள்ளலாம், அதுதான் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்றால்.
அழகியைப் பயன்படுத்திப்
பயன் பெறுவோம். பலருக்கும் அதன் பயன்பாடுகளை எடுத்துச் சொல்வோம். 😊
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.
புகைப்படக்கலைஞர்,
பிரான்ஸ்.